தடைச்செய்யப்பட்டுள்ள விடுதலைப்புலிகள் அமைப்புக்கு நிதி உதவி வழங்கியதாக தெரிவித்து மலேசியாவில் கைதுசெய்யப்பட்ட பிரதேச அரசியல்வாதி உள்ளிட்ட 8 பேர் அந்த நாட்டு உயர்நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
அவர்களுக்கு எதிராக சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளை மலேசிய சட்டமா அதிபர் மீள பெற்றுக்கொண்டதை அடுத்தே அவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
விடுதலைப்புலிகள் அமைப்பை மீண்டும் புத்துயிர் பெறசெய்வதற்காக நிதி பங்களிப்பு செய்தமை மற்றும் அந்த அமைப்பின் தலைவர்களின் புகைப்படங்களை தம்வசம் வைத்திருந்த குற்றத்திற்காக சுமார் 12 பேர் வரையில் கைது செய்யப்பட்டனர்.
அவர்களுக்கு எதிராக 24 குற்றச்சாட்டுகளும் முன்வைக்கப்பட்டிருந்தன.
எனினும் அண்மையில் இந்த வழக்கு தொடர்பான விசாரணைகளில் முன்னிலையாகி சாட்சி வழங்கிய அந்த நாட்டு சட்டமா அதிபர் குறித்த குற்றச்சாட்டுகளை இரத்து செய்யுமாறு நீதிமன்றத்தை கேட்டுக்கொண்டார்.
அவர்கள் விடுதலை புலிகள் அமைப்பின் தலைவர்களின் புகைபடங்களை தம்வசம் வைத்திருந்தார்களே தவிர வேறு எந்தவித பயங்கரவாத செயற்பாடுகளிலும் ஈடுபடவில்லை என அந்த நாட்டு சட்டமா அதிபர் நீதிமன்றில் தெரிவித்திருந்தமை குறிப்பிடதக்கது.