சமகி ஜனபல வேகயவின் சின்னம் தொடர்பில் இன்று (09) தீர்மானிக்கவுள்ளதாக அந்த கூட்டணியின் தலைவரும், முன்னாள் எதிர்க் கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
நிட்டம்புவ பகுதியில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பு ஒன்றின் போதே அவர் இதனை கூறினார்.
எவ்வாறாயினும் ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழுவில் புதியதொரு கூட்டமைப்பை உருவாக்க அனுமதியளிக்கப்படவில்லை என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார்.
இதேவேளை ஐக்கிய தேசியக் கட்சியின் பெரும்பாலான உறுப்பினர்கள் சமகி ஜனபல வேகயவுடன் இணைந்துள்ளதாக அந்த கூட்டணியின் பொதுச்செயலாளர் ரஞ்ஜித் மத்துமபண்டார தெரிவித்துள்ளார்.