Home இலங்கைச் செய்திகள் பேருந்து விபத்தில் 18 பேர் வைத்தியசாலையில்

பேருந்து விபத்தில் 18 பேர் வைத்தியசாலையில்

by Thushyanthy Nirooshan

யாழ்ப்பாணம் – கண்டி A9 வீதியின் திருப்பனே பகுதியில் இடம்பெற்ற விபத்தில் 18 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சிவனொளிபாத மலைக்கு யாத்திரை சென்று வந்து கொண்டிருந்தவர்களே இவ்வாறு விபத்திற்கு உள்ளாகியுள்ளனர்.

இன்று (09) அதிகாலை 3.15 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

ஓட்டுனருக்கு நித்திரை ஏற்பட்டதன் காரணமாக பேருந்து பாதையை விட்டு மின்கம்பம் ஒன்றுடன் மோதியதில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தில் பேருந்தில் பயணித்த 55 பேரில் 18 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவம் தொடர்பில் பேருந்து ஓட்டுனர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் திருப்பனே பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

0 விளக்கவுரை அளி
0

related posts

Leave a Comment