உயிா்த்த ஞாயிறு தற்கொலை தாக்குதல் தொடா்பில் நோ்மையான விசாரணைகளை நடாத்திய பொலிஸ் அதிகாாிகள் இடமாற்றம் செய்யப்பட்டதை கண்டிதுள்ள கா்தினால் மல்கம் ரஞ்சித் ஆ ண்டகை, கோட்டாவுக்கு எதிராக போராடவுள்ளதாகவும் எச்சாித்துள்ளாா்.
றாகம தேவத்த தேவாலயத்தில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் பேசும்போதே அவா் மேற்கண்டவா று கூறியிருக்கின்றாா். இதன்போது மேலும் அவா் கூறுகையில், இதன்போது மேலும் அவா் கூறு கையில், உயிர்த்த ஞாயிறு தினத் தீவிரவாத தாக்குதல் குறித்து
விசாரணை நடத்தி வந்த பொலிஸ் அதிகாரிகள் பலருக்கு புதிய அரசாங்கம் இடமாற்றம் வழங்கப்பட்டிருக்கிறது. இதனை ஏற்க முடியாது என்றும் கூறினாா். அத்தோடு, ஈஸ்டர் தாக்குதல் குறித்து இந்த அரசாங்கமும் நடத்தும் விசாரணைகளில் திருப்தி அடைய முடியாது.
என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை கடந்த 05ம் திகதி ஊடகவியலாளர்களை சந்தித்த ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, தமது அரசாங்கம் ஈஸ்டர் தாக்குதல் குறித்து நடத்தும் விசாரணையில் கர்தினால் ரஞ்சித் ஆண்டகைக்கு பூரண நம்பிக்கை திருப்தி
இருப்பதை கூறியுள்ளார் என்று ஜனாதிபதி குறிப்பிட்டிருந்தார் என்பது சுட்டிக்காட்டத்தக்கது.