பொகவந்தலாவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பொகவந்தலாவ கிவ் தோட்ட வனப்பகுதிக்கு இனந்தெரியாதவர்களால் தீ வைக்கபட்டுள்ளது.
இந்த சம்பவம் இன்று (08) காலை 10 மணி அளவில் இடம்பெற்றதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
குறித்த வனப்பகுதிக்கு வைக்கபட்ட தீயினால் 4 ஏக்கர் வனப்பகுதியில் எரிந்து கருகியுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்
கிவ் தோட்ட முகாமையாளரின் நடவடிக்கையின் ஊடாக தீயினை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்கான நடவடிக்கையினை மேற்கொண்டு வருவதாக பொகவந்தலாவ பொலிஸார் தெரிவித்தனர்.
நாட்டில் நிலவும் கடும் வெப்பம் காரணமாக வனப்பகுதிகளுக்கு தீ வைக்கப்படுகின்றமையால் குடி நீருக்கு பாரிய தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதோடு காட்டில் வாழுகின்ற விலங்குகளும் உயிர் இழக்கக்கூடிய நிலைகாணப்படுவதாக தெரிவிக்கபடுகிறது.
எனவே இது போன்ற வனப்பகுதிகளுக்கு தீ வைக்கப்படுகின்ற சம்பவம் தொடர்பில் பொலிஸாருக்கு தகவல் வழங்குமாறு பொதுமக்களை கோரியுள்ளனர்.