Home விளையாட்டு 5 ஆவது முறையாகவும் உலக கிண்ணம் அவுஸ்திரேவியாவிற்கு

5 ஆவது முறையாகவும் உலக கிண்ணம் அவுஸ்திரேவியாவிற்கு

by nirooshan

மகளிர் 20 ஓவர் உலக கிண்ணத்தை 5 ஆவது முறையாகவும் அவுஸ்திரேலியா அணி கைப்பற்றியுள்ளது.

மகளிர் 20 ஓவர் உலக கிண்ண இறுதிப் போட்டி இன்று மெல்போர்னில் இடம்பெற்றது.

நாணய சுழற்சியை வென்ற அவுஸ்திரேலியா அணி முதலில் துடுப்பாட்டத்தை தேர்வு செய்தது.

அதன்படி, அவுஸ்திரேலியா அணியின் தொடக்க வீராங்கனைகளாக அலிசா ஹீலி, பெத் மூனி களமிறங்கினர்.

போட்டியின் தொடக்கம் முதலே இருவரும் அதிரடியாக ஆடினர். இதனால் அணியின் ஓட்ட வேகம் கணிசமாக உயர்ந்தது.

முதல் விக்கெட்டுக்கு இந்த ஜோடி 115 ஓட்டங்களை சேர்த்தது. அதிரடியாக ஆடிய ஹீலி அரை சதமடித்தார். அவர் 75 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார்.

இறுதியில், அவுஸ்திரேலியா அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 184 ஓட்டங்களை எடுத்துள்ளது.

மூனி கடைசி வரை ஆட்டமிழக்காமல் 78 ஓட்டங்களை சேர்த்தார்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இந்தியா 19.1 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்களையும் இழந்து 99 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக் கொண்டது.

அதனடிப்படையில் 85 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தி 5 ஆவது முறையாகவும் உலக கிண்ணத்தை அவுஸ்திரேலியா தனதாக்கி கொண்டது.

0 விளக்கவுரை அளி
0

Leave a Comment