Home சினிமா செய்திகள் அன்றே சொன்ன தளபதி

அன்றே சொன்ன தளபதி

by Thushyanthy Nirooshan

விஜய்யின் வாழ்க்கை அன்று முதல் இன்று வரை பயணித்தை நினைக்கும் போது பலருக்கும் தன்னம்பிக்கை ஊட்டும் விஷயமாக தான் இருக்கும். அவ்வகையில் அவர் பல வருடங்களுக்கு அளித்த பேட்டியில் சொன்னதை இப்போது பார்ப்போம்.

வாழ்க்கையில் அம்மா தான் முக்கியம். அம்மாவின் மேல் பாசம் இல்லாதவர்கள் இருக்க முடியாது. எனக்கும் எல்லாமே என் அம்மா தான். பல விசயங்களை வாழ்வில் சொல்லலாம். என்னுடைய படங்களை பார்த்துவிட்டு என் அப்பா என் தவறுகளை தனியே அழைத்து போய் மெதுவாக சொல்வார். ஆனால் அம்மா உடனே படபடவென சொல்லிவிடுவார்.

நான் நடிகராக ஆசைப்பட்டேன். ஆனால் வீட்டில் டாக்டராக வேண்டுமென ஆசைப்பட்டார்கள். இந்த பெரிய போராட்டத்தில் எனக்கு துணையாக இருந்தது அம்மா தான். காதலுக்கு மரியாதை படத்தின் சிவக்குமார் சார், ஸ்ரீவித்யா மேடம் கேரக்டர் போல தான் நிஜ வாழ்வில் என்னுடைய அம்மா அப்பாவும்.

அம்மா மனைவி இருவருமே எனக்கு பிடித்தவர்கள். கடவுளை நேரில் பார்க்க முடியாது. ஆனால் அம்மாவை நேரில் பார்க்கலாம். அதனால் தான் அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம் என பெரியோர்கள் சொல்லிவைத்தார்கள்.

தாயை நாம் எந்தளவிற்கு உயர்த்தி வைக்கிறோமோ அந்தளவிற்கு இறைவன் நம்மை உயர்த்தி வைப்பார். இதை என் வாழ்வில் பார்த்துவிட்டேன் என கூறினார். அவர் சொன்னதை அவருடைய வாழ்க்கையின் தற்போதைய நிலையையும் ஒப்பிடும் போது சரியாக பொருந்தியுள்ளது என்றே சொல்லலாம். ஆம் சினிமாவில் அவர் இன்று பெரும் உச்சத்தை அடைந்துள்ளார் என்பதே உண்மை.

0 விளக்கவுரை அளி
0

related posts

Leave a Comment