Home சினிமா செய்திகள் கமல்ஹாசனுடன் இணைவது குறித்து காலம்தான் பதில் சொல்லும்

கமல்ஹாசனுடன் இணைவது குறித்து காலம்தான் பதில் சொல்லும்

by Thushyanthy Nirooshan

 புதிய அரசியல் கட்சியைத் தொடங்குவது குறித்து ரஜினி மக்கள் மன்ற மாவட்டச் செயலாளர்களை நடிகர் ரஜினிகாந்த் சந்தித்துப் பேசினார்.

“மக்கள் மன்ற நிர்வாகிகளுடனான சந்திப்பு திருப்தி அளித்தது. ஆனால் தனிப்பட்ட முறையில் ஒரு விஷயத்தில் மட்டும் திருப்தி இல்லை; ஏமாற்றமே மிஞ்சியுள்ளது. அதனை இப்போது கூற முடியாது. நேரம் வரும்போது கூறுகிறேன். கமல்ஹாசனுடன் இணைவது குறித்து  காலம்தான் பதில் சொல்லும்,” என்று கூறியுள்ளார்.

சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள ராகவேந்திரா திருமண மண்டபத்தில் சுமார் 2 மணி நேரம் நீடித்த இந்த சந்திப்புக் கூட்டத்தில், ரஜினி மக்கள் மன்றத்தின் அடுத்தகட்ட நகர்வுகள், அரசியல் நிலவரங்கள் குறித்து விவாதிக்கப்பட்ட அதேவேளையில்,  ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் எப்படி செயல்படுவது என்பது குறித்து ரஜினி அறிவுரை வழங்கியதாகவும் கூறப்படுகிறது.  

இருப்பினும் தனக்கு திருப்தியில்லாத விஷயம் என்று ஒன்றைக் கூறி, அது என்னவென்று வெளிப்படையாகக் கூறாமல் ரகசியமாக வைத்துள்ளதால் கட்சி தொடங்குவது இன்னும் தாமதமாகுமோ என்றும் பரவலாகப் பேசப்படுகிறது.

இந்தக் கூட்டத்திற்குப் பின்னர்  ரஜினி காந்த் தனது போயஸ் கார்டன் இல்லத்தின் வெளியே செய்தியாளர்களிடம் பேசுகையில், “கட்சி தொடங்குவதைப் பற்றி ஓராண்டுக்குப்பின் நிர்வாகிகளைச் சந்தித்துப் பேசினேன். எனது சந்தேகங்களுக்கு உரிய விளக்கங்களைத்   கேட்டுத் தெரிந்துகொண்டேன் என்று கூறினார். 

0 விளக்கவுரை அளி
0

related posts

Leave a Comment