Home உலகச் செய்திகள் தலைக்கவசம் அணியாமல் வந்த 69 லட்சம் பேர் மீது வழக்கு

தலைக்கவசம் அணியாமல் வந்த 69 லட்சம் பேர் மீது வழக்கு

by Thushyanthy Nirooshan

போக்குவரத்து விதிகள் முழுமையாகப் பின்பற்றப்பட்டு வருவதால் தற்போது சாலை விபத்துகளால் ஏற்படும் மரணங்கள் 38% குறைந்துள்ளதாகவும் அதனை இந்தாண்டு 50%  ஆக குறைக்க நடவடிக்கை      எடுத்து வருவதாகவும் உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

இருசக்கர வாகன ஓட்டி கள், அவரது பின்புறம் அமர்ந்து பயணிப்பவர் இருவரும் தலைக்கவசம் அணிவதை கட்டாயமாக்கக் கோரியும் நான்கு சக்கர வாகன ஓட்டிகள் சீட் பெல்ட் அணிவதை கட்டாயமாக்கக் கோரியும் சென்னை கொரட் டூரைச் சேர்ந்த கே.கே. ராஜேந்திரன், உயர் நீதி மன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்திருந்தார். 

நேற்று விசாரணைக்கு  வந்த இந்த வழக்கை வரும் மார்ச் 18ஆம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர். 

“தமிழகம் முழுவதும்  2018 நவம்பர் முதல் 2019 நவம்பர் வரையில் தலைக்கவசம் அணியாமல் சென்றதாக 68,76,452 பேர் மீதும் நான்கு சக்கர வாகனத்தில் சீட்  பெல்ட் அணியாமல் சென்ற தாக 15,90,382 பேர் மீதும் வழக்கு பதியப்பட்டு உள்ளது. இதேபோல குடித்துவிட்டு வாகனம் ஓட்டியதாக 2,7,291 பேர் மீதும் வாகனம் ஓட்டும்போது கைபேசியை உபயோகித்ததாக 4,63,543  பேர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது.

போக்குவரத்து விதிகள் முழுமையாகப் பின்பற்றப்பட்டு வருவதால் 2016ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் தற்போது சாலை விபத்து களால் ஏற்படும் மரணங்கள் 38% குறைந்துள்ளதாகவும் அதனை இந்தாண்டு 50% ஆக குறைக்க நடவடிக்கை எடுத்து வருவதாகவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 விளக்கவுரை அளி
0

related posts

Leave a Comment