வட மத்திய கடற்படை கட்டளையுடன் இணைந்து கடற்படை வீரர்கள் மன்னார், சவுத்பார் பகுதியில் மேற்கொண்டுள்ள சோதனையின் போது வெடி பொருட்களை (டைனமைட்) பயன்படுத்தி பிடிக்கப்பட்ட 88 கிலோ கிராம் மீன்களுடன் ஒருவர் கைது செய்யப்பட்டார்.
குறித்த சந்தேகநபர் 47 வயதுடைய அப் பகுதியில் வசிப்பவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
இவ்வாறு கைது செய்யப்பட்ட நபர், மீன்கள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக மன்னார் துணை மீன்வள ஆய்வாளர் அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது.