லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் மற்றும் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடித்து முடித்திருக்கும் படம் மாஸ்டர். இப்படத்தில் இவர்களுடன் இணைந்து மாளவிகா மோகனன், ஆண்ட்ரியா, சாந்தனு, அர்ஜுன் தாஸ், கௌரி கிஷன் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்து முடித்துள்ளார்கள்.
சமீபத்தில் இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்தது என்று விஜய்க்கு, விஜய் சேதுபதி கொடுத்து முத்தத்தின் புகைப்படத்தோடு இப்படத்தின் தயாரிப்பாளர் நிறுவனம் தனது டுவிட்டர் பக்கத்தில் அறிவித்திருந்தது.
இந்நிலையில் தற்போது
இப்படத்தின் ஆடியோ லாஞ்சுக்காக தான் விஜய்யின் அனைத்து ரசிகர் பட்டாளமும்
காத்துகொண்டு இருக்கிறது. ஆம் இவர் இந்த ஆடியோ லாஞ்சில் என்ன பேச போகிறார்.
மேலும் அவரின் குட்டி கதை எந்த விதமான கதை இருக்கும் என்று கேட்பதற்கே பல
லட்ச்ச ரசிகர்கள் கூடுவார்கள்.
ஆனால், இந்து முறை தனது மாஸ்டர் படத்தின் ஆடியோ லாஞ்சுக்கு தனது ரசிகர்கள் வரக்கூடாது என்று விஜய் கூறியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் இந்த கண்டிஷன் எதற்காக என்றால் “தன்னை பார்க்க வரும் ரசிகர்கள் காவல் துறையினரிடம் அடி வாங்குவதை தன்னால் பார்க்க முடிவில்லை” என்று நினைத்து தான் தளபதி விஜய் இப்படிப்பட்ட ஒரு முடிவை எடுத்துள்ளார் என்று தெரியவந்துள்ளது.