அறிமுக இயக்குநர் மனோஜ் இயக்கத்தில் உருவாகும் படம் ‘வெல்வெட் நகரம்’. வரலட்சுமி நாயகியாக நடிக்கிறார். சில ஆண்டுகளுக்கு முன்பு கொடைக்கானலில் நடந்த உண்மைச் சம்பவத்தை மையமாக வைத்து இப்படம் உருவாகிறது. இதில் செய்தியாளராக நடிக்கிறார் வரலட்சுமி. வரும் 6ஆம் தேதி இப்படம் வெளியாகிறது. திகிலும் மனோதத்துவ அம்சங்களையும் முன்வைத்து திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளதாம்.