Home உலகச் செய்திகள் மோடி எடுத்த அதிரடி நடவடிக்கை… சுவிஸில் குவிந்த ஆதரவு

மோடி எடுத்த அதிரடி நடவடிக்கை… சுவிஸில் குவிந்த ஆதரவு

by Thushyanthy Nirooshan

எல்லை தாண்டிய தீவிரவாதத்திற்கு எதிரான இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் நடவடிக்கைக்கு ஐரோப்பின் பாராளுமன்றத்தில் உறுப்பினர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

மேலும், இந்திய அரசாங்கம் சட்டப்பிரிவு 370-ஐ ரத்து செய்தது தொடர்பில் பாகிஸ்தான் முன்வைத்த காஷ்மீர் பிரச்சனையை ஐரோப்பிய பாராளுமன்ற உறுப்பினர்கள் நிராகரித்துள்ளனர்.

சுவிட்சர்லாந்தின் ஜெனீவா நகதில் உள்ள செய்தியாளர் சங்கத்தில் சட்டப்பிரிவு 370வது நீக்கப்பட்ட பிறகு காஷ்மீரில் நிலவும் சூழ்நிலை குறித்து மதிப்பீட்டு விவாதம் நடைபெற்றது.

இதன் போது ஐரோப்பியன் நாடாளுமன்றத்தில் உறுப்பினர் கியானா கன்சியா, சர்வதேச அளவில் காஷ்மீரில் நெருக்கடி நிலை நிலவுவது போல் பாகிஸ்தான் சித்தரித்ததை கடுமையாக விமர்சித்தார்.

சர்வதேச தளத்தில் இந்திய உள்விவகாரங்கள் குறித்து விவாதிக்க பாகிஸ்தானுக்கு எந்த உரிமையும் இல்லை. தீவிரவாதத்திற்கு எதிரான பிரான்ஸ் சண்டையிட்ட போது யாரும் வாய்திறக்கவில்லை.

ஆனால், இந்தியா அதன் உள்விவகாரங்களில் நடவடிக்கை மேற்கொண்டால் பீதியும் பதற்றமும் உருவாக்கப்படுகிறது என ஐரோப்பியன் பாராளுமன்றத்தின் முன்னாள் உறுப்பினர் நாதன் கில் கூறினார்.

சொர்கம் என்றறியப்படும் உலகத்திலிருந்து நான் வருகிறேன். இந்த சொர்கம் கிளர்ச்சியாளர்கள் மற்றும் தீவிரவாதிகளால் சிதைக்கப்படுகிறது.

சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்டது காஷ்மீரில் கிளர்ச்சியாளர்கள் மற்றும் தீவிரவாதத்தை ஒடுக்க தேவையான ஒன்று என காஷ்மீரை சேர்ந்த பெண்கள் உரிமை ஆர்வலர் தெஹ்மீனா சையத் கூறினார்.

0 விளக்கவுரை அளி
0

related posts

Leave a Comment