நாடாளுமன்ற தோ்தல் அறிவிக்கப்பட்டதன் பின்னா் இடம்பெற்ற பட்டதாாிகள் நியமனத்தை உடனடியாக இடைநிறுத்துமாறு தோ்தல் ஆணைக்கு ஜனாதிபதி செயலகத்திற்கு உத்தரவு பிறப்பித்திருக்கின்றது.
தோ்தல் அறிவிக்கப்பட்டதன் பின்னா் நாடளாவிய ரீதியில் வேலையற்ற பட்டதாாிகளுக்கு அவசர அவசரமாக நியமனம் வழங்கப்பட்டது. இதன் கீழ் வடக்கு மாகாணத்தில் மட்டும் 237 பட்டதாாிக ள் நியமனத்தை பொறுப்பேற்றனா்.
இந்நிலையில் தோ்தல் செயலகத்திற்கு கிடைக்கப்பெற்ற தகவலையடுத்து உடனடியாக சகல பட்டதாாிகள் நியமனத்தையும் நிறுத்துமாறு அதிரடி உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கின்றது.