Home இலங்கைச் செய்திகள் யாழில் பாடசாலை மாணவர்கள் 61 பேர் கைது

யாழில் பாடசாலை மாணவர்கள் 61 பேர் கைது

by nirooshan

யாழ்ப்பாணத்தில் 61 மாணவர்கள் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டு விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாணத்தில் உள்ள பிரபல பாடசாலையின் 61 மாணவர்கள் யாழ்ப்பாணம் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டு விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

வடக்கின் துடுப்பாட்டம் நாளை (05) ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள நிலையில், இன்றைய தினம் (04), யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி மாணவர்கள் 61 பேர், வேம்படி உயர்தர பாடசாலைக்கு முன்பாக நின்று, பாண்ட் இசை வாத்தியங்கள் முழங்க, நடனமாடி கோசமிட்டுள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பாக, பாடசாலை நிர்வாகத்தினரால், பொலிஸாருக்கு தெரியப்படுத்தியதன் பின்னரே, 61 மாணவர்களும் யாழ்ப்பாணம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு, யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் சுமார் 5 மணித்தியாலயங்கள் தடுத்து வைக்கப்பட்டு விடுவிக்கப்பட்டுள்ளனர்.

வடக்கின் துடுப்பாட்டம் ஆரம்பிக்கப்படவுள்ள நிலையில், வீதியோரங்களில் இவ்வாறான செயற்பாடுகளை தவிர்க்கப்பட்டுள்ளதுடன், இவ்வாறான நடவடிக்கைகளில் ஈடுபடக்கூடாதென்றும் மாணவர்களுக்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.

0 விளக்கவுரை அளி
0

related posts

Leave a Comment