Home இலங்கைச் செய்திகள் மிதந்து வந்த 281 கிலோ கிராம் கேரள கஞ்சா

மிதந்து வந்த 281 கிலோ கிராம் கேரள கஞ்சா

by Thushyanthy Nirooshan

யாழ்ப்பாணம் நாகர்கோயில், கடல் பகுதியில் கடற்படையினரால் நேற்று (02) மேற்கொண்ட ரோந்துப் பணியின் போது கடலில் மிதந்து வந்த சுமார் 281 கிலோகிராம் ஈரமான கேரள கஞ்சா தொகை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

வடக்கு கடற்படை கட்டளையின் கடற்படையினர் நேற்று யாழ்ப்பாணம் நாகர்கோவில், கடலில் மேற்கொண்ட ரோந்துப்பணியின் போது, கடலில் மிதக்கும் சில பொதிகள் மீட்கப்பட்டன.

இந்த பொதிகளை மேலும் சோதனை செய்த போது சுமார் 281 கிலோ கிராம் கேரள கஞ்சா கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

கடற்படையின் தொடர்ச்சியான நடவடிக்கைகளின் விளைவாக, கேரள கஞ்சாவை கடல் வழிகள் மூலம் நாட்டிற்கு கடத்த மோசடி செய்பவர்கள் மேற்கொண்ட முயற்சிகள் தோல்வியடைந்துள்ளன.

மேலும் கடற்படை மேற்கொண்டுள்ள நடவடிக்கைகளால் இந்த கேரள கஞ்சா பொதிகள் கைவிடப்பட்டதாக நம்பப்படுகிறது. மீட்கப்பட்ட கேரள கஞ்சா பொதிகள் யாழ்ப்பாணம் பொலிஸ் போதைப்பொருள் பிரிவிடம் ஒப்படைக்கப்பட உள்ளன.

0 விளக்கவுரை அளி
0

related posts

Leave a Comment