அருண் விஜய் தமிழ் சினிமா களத்தில் திறமையான ஒரு கலைஞர். ஹீரோவாக கதாபாத்திரங்களும் அவரின் வில்லன் போன்ற மற்ற வேடங்களும் படங்களில் முக்கியத்துவமானதாக அமைவதோடு சிறப்பான நடிப்பை பதிவு சென்று வெற்றி பெற்று விடுகிறார்.
கார்த்திக் நரேன் இயக்கத்தில் அவர் நடித்துள்ள மாஃபியா படம் அண்மையில் வெளியானது. இப்படத்தில் நடிகர் பிரசன்னா, நடிகை பிரியா பவானி ஆகியோரும் நடித்திருந்தனர். விமர்சகர்களிடத்தில் கலவையா விமர்சனங்களை மாஃபியா பெற்றாலும் படம் நன்முறையில் ஓடியது. வசூல் நல்ல முறையில் அமைந்தது.
இந்நிலையில் ரசிகர்கள் மாஃபியா 2 படத்தை எதிர்பார்க்க அதற்கு அருண் விஜய் மாஃபியா சாப்டர் 2 ல் விரைவில் சந்திப்போம் என பதிவிட்டுள்ளார். இதனால் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.