திரையுலகில் நடிப்பதை தவிர்த்து மக்களுக்கு தன்னால் முடிந்த வரை உதவி செய்து வருபவர் நடிகர் ராகவா லாரன்ஸ். இவர் தனது தாய்க்கு கோவில் காட்டியது திரையுலகில் மிக பெரிய பெயரை இவர்க்கு தேடி தந்தது.
மேலும் இவர் மாற்று திறனாளிகளுக்கு அறக்கட்டளை வைத்து பல வித உதவிகளை செய்து வருவதையும், அவர்களுக்கு தனது படங்களில் வாய்ப்பு கொடுத்து நடிக்க வைத்தையும் நாம் பார்த்திருப்போம்.
அந்த வகையில் தற்போது இதுவரை யாரும் செய்யாத ஒரு விஷயத்தை தனது கையில் எடுத்துள்ளார் ராகவா லாரன்ஸ். ஆம் தற்போது ஹிந்து, முஸ்லீம், கிறிஸ்டியன் மூவருக்கும் ஒரே கோவில் கட்ட போகிறாராம்.
இதனை தனது சமூக வலைதள பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். இந்த பதிவில் மூன்று மதங்களின் பிள்ளைகளை தன்னுடன் வைத்துக்கொண்டு புகைப்படத்தை எடுத்து பதிவிட்டுள்ளார். மேலும் இதற்கு ரசிகர்கள் தரப்பில் இருந்து பெரும் பாராட்டுகளாக ஆதரவும் குவிந்து கொண்டு இருக்கிறது.