டொனால்டு டிரம்ப் அமெரிக்காவின் ஜனாதிபதி என்பது மட்டுமல்லாமல், அந்நாட்டு பெருமுதலாளிகளில் முக்கியமானவர் என்பது அனைவரும் அறிந்ததே. அவருக்கு உலகம் முழுவதும் பல ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு தொழில்கள் நடக்கின்றன. சொத்துக்கள் உள்ளன.அந்த வகையில், அமெரிக்காவுக்கு வெளியே இந்தியாவில்தான் டிரம்புக்குஅதிகமான சொத்துகள் இருப்பதாகசெய்திகள் வெளியாகியுள்ளன.
அமெரிக்க ஜனாதிபதி ஆவதற்கு முன்பே இந்தியாவுடன் டிரம்ப் கம்பெனிநெருக்கம் காட்டி வந்தது. இங்குள்ள பல்வேறு மாநிலங்களில் ரியல் எஸ்டேட்துறையில் பல நூறு கோடி ரூபாயை முதலீடு செய்தது. இந்தியாவில் டிரம்ப்பின் முதல் சொத்து புனேவில் உள்ள 23 மாடிகட்டடமான ‘டிரம்ப் டவர்’ (அடுக்குமாடி குடியிருப்புகள்) ஆகும். இதேபோல கொல்கத்தாவில் 36 மாடிகளுடனும், தில்லியில் 50 மாடிகளுடன் ‘டிரம்ப்டவர்கள்’ உள்ளன. எல்லாவற்றுக்கும் மேலாக மும்பையில் உள்ள 75 மாடி‘டிரம்ப் டவர்’, அவரது குடும்பத்தின் மிகப் பெரிய முதலீடாகப் பார்க்கப்படுகிறது. இங்கு அடுக்குமாடி வீடுகளை வாங்கிய குடும்பங்கள், பயன்படுத்த தனி ஜெட் விமானத்தையே டிரம்ப் குடும்பம் வழங்கி இருப்பதாகவும் கூறப்படுகிறது.புனேவில் டிரம்ப் நிறுவனத்துடன் இணைந்து அடுக்குமாடி குடியிருப்பைக் கட்டிய நிறுவனத்தில், என்சிபி கட்சித் தலைவர் சரத் பவாரின் மகள் சுப்ரியா சுலேவுக்கு பங்குகள் உள்ளன. மும்பையில் டிரம்பின் தொழில் பங்குதாரராக இருப்பவர், பாஜக-வைச் சேர்ந்த முக்கிய பிரபலமான மங்கள் பிரபாத் என்பது குறிப்பிடத்தக்கது.