Home இலங்கைச் செய்திகள் பொலிஸாா் கைது, தற்காலிகமாக பதவியும் பறிக்கப்பட்டது..

பொலிஸாா் கைது, தற்காலிகமாக பதவியும் பறிக்கப்பட்டது..

by nirooshan

ஹோட்டல் ஒன்றில் மது அருந்திவிட்டு தா்க்கத்தில் ஈடுபட்டதுடன், ஹோட்டல் உாிமையாளாின் வாகனம் மீது மோதி அட்டகாசம் புாிந்த 4 பொலிஸ் உத்தியோகஸ்த்தா்கள் கைது செய்யப்பட்டிருக்கின்றனா். 

கைது செய்யப்பட்ட பொலிஸ் உத்தியோகஸ்தர்கள் கான்ஸ்டபிள்கள் நால்வரும் பணியிலிருந்து இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.குறித்த பொலிஸ் உத்தியோகஸ்தர்கள நால்வரும் புதன்கிழமை 

கல்கிஸ்ஸவிலுள்ள ஹோட்டலொன்றில் மது அருந்தியுள்ளதுடன் ஹோட்டலில் இருந்து வெளியேறும் போது பொலிஸ் உத்தியோகஸ்தர் ஒருவர் ஓட்டிச்சென்ற மோட்டார் சைக்கிள் ஹோட்டல் உரிமையாளரின் காரில் மோதி 

விபத்து இடம்பெற்றதாகவும் மேலதிக விசாரணைகளில் தெரிய வந்துள்ளது. மேலும், சந்தேக நபர்களான பொலிஸ் உத்தியோகஸ்தர்கள் நால்வரும் ஹோட்டலின் உரிமையாளருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். 

அதன்போது சம்பவம் தொடர்பில் சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ரொஹான் பிரேமரத்னவிற்கு தகவல் வழங்கியுள்ளனர்.சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி வழங்கிய தகவலுக்கமைய பொலிஸ் குழுவினர் குறித்த ஹோட்டலுக்குச் சென்று 

உடனடியாக மது போதையிலிருந்த பொலிஸ் உத்தியோகஸ்தர்கள் நால்வரையும் கைது செய்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்தது. மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

0 விளக்கவுரை அளி
0

related posts

Leave a Comment