Home இலங்கைச் செய்திகள் இலங்கை வந்த வெளிநாட்டு பிரஜை கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து வெளியேற்றம்

இலங்கை வந்த வெளிநாட்டு பிரஜை கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து வெளியேற்றம்

by nirooshan

பெனின் நாட்டை சேர்ந்த பயணி ஒருவர் இன்று காலை வந்த விமானத்திலேயே திருப்பி அனுப்ப விமான நிலைய குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்கள அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

இலங்கைக்குள் பயணிப்பதற்கான சரியான சுற்றுலா திட்டம் மற்றும் பயணத்தின் பின்னர் திரும்பிச் செல்ல விமான பயணச்சீட்டு இன்றி இலங்கைக்குள் வர முயற்சித்தவரே இவ்வாறு திருப்பி அனுப்பப்பட்டுள்ளார்.

41 வயதான இந்த நபர் பெனின் நாட்டில் வாசனை திரவங்களை விற்பனை செய்யும் வர்த்தகர் எனவும் தென் ஆபிரிக்காவின் பெனின் நாட்டில் இருந்து நைஜீரியா சென்று அங்கிருந்து கத்தார் நாட்டுக்கு சென்றுள்ளதுடன் தோஹாவில் இருந்து இன்று காலை 9.20 அளவில் கட்டுநாயக்க வந்த விமானத்தில் இலங்கை வந்துள்ளார்.

இலங்கைக்கு சுற்றுலா பயணம் மேற்கொள்ள வந்துள்ளதாக கூறிய போதிலும் அதற்கான திட்டங்கள் அவரிடம் இருக்கவில்லை.

தங்கி இருப்பதற்கான ஹோட்டல் அறைகளையும் அவர் ஒதுக்கிக்கொள்ளவில்லை. அத்துடன் திரும்பிச் செல்ல விமானப் பயணச்சீட்டை வைத்திருக்கவில்லை என்பதால், பயணி மீது சந்தேகம் கொண்ட அதிகாரிகள் விசாரணை நடத்தி திருப்பி அனுப்பியுள்ளனர்.

இவ்வாறு உரிய சுற்றுலா பயண திட்டங்கள் இன்றி இலங்கைக்கு வரும் ஆபிரிக்க பிரஜைகள், கடன் அட்டை மோசடி, நிதி மோசடி போன்ற சட்டவிரோத நடவடிக்கைளில் ஈடுபட்டு மிரிஹான தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

0 விளக்கவுரை அளி
0

related posts

Leave a Comment