நாளை நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும்வகையில் பாணின் விலை 5 ரூபாவினால் குறைக்கப்படவுள்ளதாக அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
கொழும்பில்
இன்று (25 நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது பேக்கரி உரிமையாளர்கள்
சங்கத்தின் தலைவர் என்.கே. ஜயவர்தன் இதுதொடர்பாக தெரிவிக்கையில் பேக்கரி
உரிமையாளர்களுக்கு அரசாங்கம் வழங்கிய சலுகைகளின் நன்மைகளை மக்களுக்கு
வழங்கும் வகையில் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டதாக தெரிவித்தார்.
அரசாங்கத்தின்
வரிச் சலுகையில் 90 சதவீதம் பேக்கரி உரிமையாளர்களுக்குக் கிடைத்துள்ளது.
பேக்கரி உரிமையாளர்களுக்கான வரிச் சலுகையும் கிடைத்துள்ளது. பாணுக்கான
குறைந்த விலை கொண்ட கோதுமை மா அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர்
கூறினார்.