Home இலங்கைச் செய்திகள் ஹெரோயினுடன் மூவர் யாழில் கைது

ஹெரோயினுடன் மூவர் யாழில் கைது

by nirooshan

440 மில்லிகிராம் ஹெரோயின் போதைப் பொருளை உடைமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் 3 பேரை இன்று கைதுசெய்துள்ளதாக யாழ்ப்பாணம் பொலிஸார் தெரிவித்தனர்.

யாழ்ப்பாணம் நாவாந்துறை பகுதியில் போதைப் பொருள் பாவனை நடைபெறுவதாக பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலையடுத்து மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினர் மேற்கொண்ட விசாரணையில் 3 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் 23, 24, 25 வயது மதிக்கத்தக்க இளைஞர்கள் என தெரிவிக்கப்படுகின்றது.

இந்தக் கைது நடவடிக்கையில் மாவட்ட குற்றத்தடுப்புப் பிரிவின் பிரதான பொலிஸ் பரிசோதகர் நிமால் பிரான்சிஸ் மற்றும் உப பொலிஸ் பரிசோதகர் பிரதீப் ஆகியோர் இந்த நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களிடமிருந்து 440 மில்லிகிராம் ஹெரோயின் போதைப்பொருள் மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மேலும் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் மூவரையும் நீதிமன்றத்தில் முற்படுத்த அதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

0 விளக்கவுரை அளி
0

related posts

Leave a Comment