Home சினிமா செய்திகள் வெளிவந்த ஒரு நிமிடத்தில் வேற லெவல் சாதனை செய்த வாத்தி கம்மிங்

வெளிவந்த ஒரு நிமிடத்தில் வேற லெவல் சாதனை செய்த வாத்தி கம்மிங்

by Thushyanthy Nirooshan

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் மற்றும் விஜய் சேதுபதி நடித்து முடித்துள்ள படம் மாஸ்டர். இப்படத்தில் விஜய்க்கு, வில்லனாக விஜய் சேதுபதி நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இப்படத்தில் மாளவிகா மோகனன், ஆண்ட்ரியா, சாந்தனு, அர்ஜுன் தாஸ், கௌரி கிஷன் உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்து வருகின்றனர்.


சென்ற மாதம் இப்படத்தில் இருந்து விஜய் தனது சொந்த குரலில் பாடி ஒரு குட்டி ஸ்டோரி எனும் பாடல் வெளிவந்து யூடியூபில் பல பல சாதனைகளை செய்து வந்தது.

மேலும் சமீபத்தில் இப்படத்தின் ஆடியோ லான்ச் வரும் மார்ச் 15ஆம் தேதி வெளிவரும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தனர்.

இந்நிலையில் நேற்று இப்படத்தில் இருந்து இரண்டாம் சிங்கிள் வெளிவரும் என்று இப்படத்தின் தயாரிப்பாளர் நிறுவனம் அறிவித்திருந்தது.

அதன்படி வெளிவந்த வாத்தி கம்மிங் எனும் வெளிவந்த 1 நிமிடத்தில் 40 ஆயிரம் பார்வையாளர்களை கொண்டு வேற லெவெலில் சாதனை செய்துள்ளது.

0 விளக்கவுரை அளி
0

related posts

Leave a Comment