Home இலங்கைச் செய்திகள் வெளிநாட்டு சிகரட்களுடன் ஒருவர் கைது

வெளிநாட்டு சிகரட்களுடன் ஒருவர் கைது

by Thushyanthy Nirooshan

ஒரு தொகை ​வெளிநாட்டு சிகரட்களை டுபாயில் இருந்து சட்டவிரோதமான முறையில் இலங்கைக்கு கொண்டு வந்த நபர் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.

குருணாகல் பகுதியை சேர்ந்த 33 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த நபர் இன்று (10) அதிகாலை டுபாயில் இருந்து இலங்கைக்கு வருகை தந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த நபர்களின் பயணப் பொதியில் இருந்து 138 பெட்டிகளில் அடைக்கப்பட்ட 27,600 சிகரட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதுடன், அவற்றின் பெறுமதி 13,80,000 ரூபா என சுங்கப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் சுங்க அதிகாரிகள் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

0 விளக்கவுரை அளி
0

related posts

Leave a Comment