திருகோணமலை தலைமையகப் பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பிரதேசத்தில் டைனமைட் வெடிபொருட்களுடன் ஒருவரை கைது செய்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
நேற்று மாலை குறித்த நபர் கைது செய்யப்பட்டதாக தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்டவரிடம் இருந்து 12 டைனமைட் குச்சிகள், 30 அடி மற்றும் 24 அடி நீளமான வயர் ரோல்களும் கைப்பற்றப்பட்டதாக அவர்கள் தெரிவித்தனர்.
கைதுசெய்யப்பட்ட நபர் முகம்மதியா நகர், மட்கே பிரதேசத்தில் உள்ள அவரின் வீட்டில் டைனமைட் வெடிபொருட்கள் பதுக்கி வைத்திருந்த நிலையிலே கைப்பற்றப்பட்டதாக தலைமையகப் பொலிஸார் தெரிவித்தனர்.
கைதுசெய்யப்பட்ட சந்தேக நபரையும் கைப்பற்றப்பட்ட வெடிபொருட்களையும் நீதிமன்றத்தில் ஆஜர் செய்ய நடவடிக்கை மேற்கொள்வதாக அவர்கள் தெரிவித்தனர்.