தளபதி விஜய் மற்றும் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இணைந்து நடித்து வரும் மாஸ்டர் படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில் இந்த படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விரைவில் தொடங்க உள்ளது
இந்த நிலையில் சமீபத்தில் நடைபெற்ற இந்த படத்தின் படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்றபோது, விஜய்க்கு விஜய் சேதுபதி முத்தம் கொடுத்ததாக படக்குழுவினர் தரப்பில் இருந்து செய்தி வெளியானது. விஜய்சேதுபதி வழக்கமாக தனது ரசிகர்களுக்கு முத்தம் கொடுப்பது போல் தளபதி விஜய்க்கும் அவர் முத்தம் கொடுத்த செய்தி வைரலானது. இருப்பினும் இதுகுறித்த புகைப்படம் எதுவும் வெளிவரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் சற்றுமுன் விஜய்க்கு விஜய் சேதுபதி கொடுத்த முத்தம் குறித்த புகைப்படத்தை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். விஜய் பெற்ற ஸ்பெஷல் முத்தம் குறித்த இந்த புகைப்படம் தற்போது இணையதளங்களில் வைரலாக வருகிறது. மேலும் இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்துவிட்டதாகவும் படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது