Home சினிமா செய்திகள் வாட்ச் மாதிரி தான் நம்ம பிசினஸ்: ஆர்யாவின் ‘டெடி’ டீசர்

வாட்ச் மாதிரி தான் நம்ம பிசினஸ்: ஆர்யாவின் ‘டெடி’ டீசர்

by Thushyanthy Nirooshan

25 லட்ச ரூபாய் மதிப்புள்ள சுவிஸ் நாட்டு வாட்சில காட்டுறா அதே டைம் தான் 100 ரூபாய்க்கு பிளாட்பார்மில் வாங்குற டிஜிட்டல் வாட்சிலும் டைம் காட்டும். ஆனால் அதை ஏன் வாங்குறாங்க தெரியுமா? அதுல இருக்குற 600 சின்ன சின்ன மெக்கானிக் பார்ட்ஸ் எல்லாம் ஒண்ணா சரியா வேலை செஞ்சா தான் கரெக்டா டைம் காட்டும். ஒன்னு தப்பா இருந்தாலும் சரி அவ்வளவுதான், அது மாதிரிதான் நம்ம பிசினஸ்’ என்ற மகிழ்திருமேனி வசனத்தோடு ஆரம்பிக்கிறது ’டெடி’ படத்தின் டீஸர்.

ஆர்யா-சாயிஷா ஜோடியாக நடித்துள்ள இந்த படம் விரைவில் வெளிவர உள்ள நிலையில் இந்த படத்தின் டீசர் சற்றுமுன் ஒன்று வெளியாகியுள்ளது. அதிரடி ஆக்ஷன் படமாக இந்த படம் உருவாகி இருக்கிறது என்பது இந்த படத்தின் டீசரில் இருந்து தெரிய வருகிறது.

இயக்குனர் சக்தி சௌந்தரராஜனின் முந்தைய படமான ’டிக் டிக் டிக்’ படம் போல ஒவ்வொரு காட்சியும் விறுவிறுப்பாக இருக்கும் என்று தெரிகிறது. குறிப்பாக டெடி பொம்மை மனிதர்கள் போல் பேசும் காட்சிகள் தமிழ் ரசிகர்களுக்குப் புதுமை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவில் இருந்து கடத்தப்படும் பெண்கள் என்ன ஆகிறார்கள் என்பதுதான் இந்த படத்தின் மெயின் கதை என்று தெரிகிறது. அதிரடி ஆக்ஷன் காட்சிகளில் ஆர்யா வெளுத்து வாங்கியிருக்கிறார். டி. இமானின் பின்னணி இசை படத்திற்கு கூடுதல் வலு சேர்க்கிறது. சக்தி சௌந்தர்ராஜனின் வித்தியாசமான திரைக்கதையில் உருவாகியிருக்கும் இந்த படம் ஆக்சன் ரசிகர்களுக்கான விருந்து என தெரிகிறது.

0 விளக்கவுரை அளி
0

related posts

Leave a Comment