விஷால் நடிப்பில் இயக்குனர் மிஷ்கின் இயக்கி வந்த ’துப்பறிவாளன் 2’ படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு சமீபத்தில் லண்டனில் நடைபெற்று முடிந்த நிலையில் விரைவில் சென்னையில் இந்த படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு தொடங்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
இந்த நிலையில் திடீர் திருப்பமாக விஷால் மற்றும் மிஷ்கின் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக மிஷ்கின் இந்த படத்தில் விலகியதாக அறிவிக்கப்பட்டது. இதனை அடுத்து விஷாலே இந்த படத்தின் மீதி பகுதிகளை இயக்க திட்டமிட்டார்.
இந்த நிலையில் சற்றுமுன் ‘துப்பறிவாளன் 2’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. ’துப்பறிவாளன்’ படத்தில் இடம்பெற்ற கணியன் பூங்குன்றன் கேரக்டர் இந்த படத்திலும் இடம்பெற்றுள்ளதாகவும் அதேபோல் மனோ கேரக்டரும் இந்த படத்தில் இருப்பதாகவும் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டரில் அறிவிக்கப்பட்டுள்ளது.
’இம்முறை வேட்டை லண்டனில்’ என்ற வாசகத்துடன் வெளியாகியுள்ள இந்த ’துப்பறிவாளன் 2’ திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வைரல் ஆகிவருவது. விஷால் இயக்கத்தில் இளையராஜா இசையில் உருவாகி வரும் இந்த படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என்றும் இந்த படம் இவ்வருட இறுதிக்குள் வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.