சமகி ஜனபல வேகயவை கூட்டணியாக உருவாக்க செயற்குழுவின் அனுமதி உள்ள நிலையில் ரணில் விக்கிரமசிங்க உள்ளிட்ட ஐக்கிய தேசிய கட்சியின் சிலர் தனித்து போட்டியிட தீர்மானித்துள்ளமையானது ராஜபக்ஷக்களின் விருப்பப்படியே என காலி மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மனுஷ நாணாயக்கார தெரிவித்துள்ளார்.
தற்போதைய நிலையில், ரணில் விக்கிரமசிங்க ராஜபக்ஷக்களின் தாளத்திற்கு ஐக்கிய தேசிய கட்சியை ஆட்டுவிப்பதாக அவர் தெரிவித்தார்.
பத்தேகம பிரதேசத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பொன்றில் கலந்து கொண்டு அவர் இதனை தெரிவித்தார்.
இதன்போது, கட்சி செயற்பாட்டாளர்களை சந்தித்த அவர், சஜித் பிரேமதாச தலைமையிலான சமகி ஜனபல வேகயவின் கீழ் போட்டியிடுவதா? அல்லது ரணில் விக்கிரமசிங்கவின் தலைமையில் போட்டியிடுவதா? என கேள் எழுப்பியிருந்தார்.
அதற்கு அங்கிருந்தவர்களின் பெரும்பாலானோர், எந்த சின்னமாக இருந்தாலும் சஜித் பிரேமதாசவின் தலைமையில் கீழ் போட்டியிட வேண்டும் என தெரிவித்திருந்தனர்.
அங்கு தொடர்ந்தும் கருந்து தெரிவித்த அவர்,
´இது
நியாயமற்ற முறையில் செய்யப்பட்டுள்ளது. ஒரு அநாகரீகமான காரியத்தைச்
செய்துள்ளார்கள். சமகி ஜனபல வேகயவை உருவாக்க ஐக்கிய தேசிய கட்சியின் மத்திய
செயற்குழு தீர்மானித்துள்ளது. கூட்டணியின் தலைமைத்துவம், பிரதமர்
வேட்பாளர் பதவி சஜித் பிரேமதாசவிற்கு பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ளது.
கூட்டணின்
பொதுச் செயலாளராக ரஞ்சித் மத்தும பண்டாரவை செயற்குழு ஏற்றுக் கொண்டுள்ளது.
ஐக்கிய தேசிய கட்சியின் குழுவொன்றும் மற்றும் சஜித் பிரேமதாச தலைமையிலான
குழுவொன்றுக்கும் இடையில் பலசுற்றுப் பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றன.
இறுதியில் சமகி ஜனபல வேகயவின் யாப்பில் சிக்கல் காணப்படுவதாக தெரிவித்து,
யானை சின்னம் தருகிறோம் அன்னம் சின்னம் தருகிறோம் என்று மூலையில்
போடப்பட்டுள்ளது. இது அருவருப்பான செயல்´ என அவர் தெரிவித்தார்.