015 ஆம் ஆண்டு முதல் அறிமுகப்படுத்தப்பட்ட இணையமயப்படுத்தப்பட்ட நிதிச் செயலாற்றுகையின் மதிப்பீட்டின் கீழ் இலங்கையில் உள்ள 844 நிறுவனங்களின் நிதிச் செயலாற்றுகை மதிப்பீடு செய்யப்பட்டது.
இதன் பிரகாரம் 2018 ஆம் ஆண்டு பாராளுமன்ற கணக்கீடு தொடர்பான நிதிச் செயலாற்றுகையின் தொடர்ச்சியான முன்னேற்றத்திற்காக நாடாளுமன்ற பொதுக்கணக்குகள் குழுவால் மேற்கொள்ளப்பட்ட மதிப்பீடுகளில் 110 நிறுவனங்களுக்கு அதி உயர் நிதிச் செயலாற்றுகையை வெளிப்படுத்தியமைக்காக விருதுகளும், சான்றிதழ்களும் பாராளுமன்றத்தில் வைத்து 28.02.2020 வழங்கப்பட்டது.
இவ் விருது வழங்கும் நிகழ்வில் யாழ். மாவட்ட செயலக அரசாங்க அதிபர் உயர் திரு. க.மகேசன் கலந்து கொண்டு 97 புள்ளிகளுடன் முதலிடத்தைப் பெற்ற யாழ்.மாவட்ட செயலகத்திற்கான தங்கவிருதினைப் பெற்றுக்கொண்டார் .
யாழ். மாவட்ட செயலக பிரதம கணக்காளர் திரு.ஜே. கில்பேட் குணம் மேலும் தெரிவிக்கையில், நிதி மற்றும் நிர்வாக நடைமுறைகள் வினைத்திறனாக பேணப்பட்டமையினால் யாழ்.மாவட்ட செயலகத்திற்கு இவ் விருது கிடைத்ததாகவும் மாவட்ட மற்றும் பிரதேச உத்தியோகத்தர்களின் அர்ப்பணிப்பான சேவையினால் மாதாந்த மற்றும் ஆண்டு அறிக்கைகள் உரிய அமைச்சு மற்றும் திறைசேரிக்கு உரிய காலத்தில் அனுப்பி வைக்கப்பட்டதோடு அரச வளங்களை வினைத்திறனாக பயன்படுத்தியமையினை மதிப்பீடு செய்யப்பட்டு தங்கவிருது வழங்கப்பட்டதாக குறிப்பிட்டுள்ளார்.