Home இலங்கைச் செய்திகள் யாழில் நள்ளிரவில் ஆலயத்தின் உண்டியல் உடைத்த இளம் ஜோடி

யாழில் நள்ளிரவில் ஆலயத்தின் உண்டியல் உடைத்த இளம் ஜோடி

by Thushyanthy Nirooshan

கல்வியங்காடு இலங்கைநாயகி அம்மன் ஆலயத்தின் உண்டியல் உடைக்கப்பட்டு பணம் திருடப்பட்டுள்ளது. துவிச்சக்கர வண்டியில் வந்த இருவரே கைவரிசையை காட்டியுள்ளனர்.

இலங்கைநாயகி அம்மன் ஆலயத்தில் நேற்று சனிக்கிழமை (07) அதிகாலை திருட்டு இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

ஆலயத்தில் வைக்கப்பட்டிருந்த உண்டியல் உடைக்கப்பட்டு பணம் திருடப்பட்டுள்ளது.

இருப்பினும் இது தொடர்பாக கோப்பாய் காவல்துறையில் இன்னும் முறைப்பாடு எதுவும் பதிவு செய்யப்படவில்லை என தெரியவந்துள்ளது.

இந்தச் சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது,

கோப்பாய் பொலீஸ் பிரிவுக்குற்பட்ட பருத்தித்துறை வீதியில் அமைந்துள்ள இலங்கைநாயகி ஆலயத்தில் நேற்று சனிக்கிழமை அதிகாலை 1.48 மணியளவில் இத்திருட்டுச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

குறித்த ஆலயத்திற்கு துவிச்சக்கர வண்டியில் வந்த இருவர் (ஒரு ஆணும்,பெண்ணும்) மேற்படி கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டமை அருகில் இருந்த CCTV காணொளியில் தெளிவாக தெரியவந்துள்ளது.

மேலும் கடந்த ஒரு வருடத்திற்கு முன்னர் இக் கோயிலின் ரூபாய் 40000-50000 பெறுமதியான கோயிலின் பித்தளை பொருட்கள் களவாடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இது போன்ற தொடர் கொள்ளை சம்பவங்கள் கல்வியங்காடு பகுதியில் அதிகரித்த வண்ணம் உள்ளது. இது தொடர்பாக கோப்பாய் காவல்துறை கவனம் செலுத்த வேண்டும்.

0 விளக்கவுரை அளி
0

related posts

Leave a Comment