முன்னாள் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இராஜகுகனேஸ்வரன் எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் ஈழமக்கள் ஐனநாயக கட்சியின் சார்பில் போட்டியிடவுள்ளார்.
எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் ஈழமக்கள் ஐனநாயக கட்சியின சார்பில் வன்னி மாவட்டத்தில் போட்டியிடும் வேட்பாளர்களிற்கான அறிமுக நிகழ்வு வவுனியாவில் அமைந்துள்ள தனியார் விருந்தினர்விடுதியில் இன்று (10) இடம்பெற்றது.
இதன்போது வன்னி தேர்தல் தொகுதியில் போட்டியிடவுள்ள வேட்பாளர்களை கட்சியின் செயலாளரும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா அறிமுகப்படுத்தினார்.
அந்தவகையில் ஈ.பி.ஆர்.எல்.எப் கட்சியின் மூலம் கடந்த 1994ஆம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்ற இராஜகுகனேஸ்வரன், ஈ பி டி பியில் போட்டியிடவுள்ளார். கட்சியின் வவுனியா மாவட்ட அமைப்பாளர் குலசிங்கம் திலீபன், வவுனியா நகர பொது சுகாதார பரிசோதகராக நகரசபையில் கடமையாற்றிய சி.கிரிதரன் உள்ளிட்டவர்கள் எதிர்வரும் தேர்தலில் போட்டியிடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.