Home சினிமா செய்திகள் மிரட்டலான தோற்றத்தில் ரெஜினா

மிரட்டலான தோற்றத்தில் ரெஜினா

by Thushyanthy Nirooshan

ரெஜினா நடித்துவரும் புதிய படத்துக்கு ‘சூர்ப்பனகை’ என்று தலைப்பு வைத்துள்ளனர். கார்த்திக் ராஜு இயக்கும் இப்படத்தின் முதல் தோற்ற சுவரொட்டி வெளியாகி உள்ளது. 

இதை விஜய் சேதுபதி வெளியிட்டார். அதில் ரெஜினாவின் தோற்றம் மிரட்டலாக இருப்பதாக ரசிகர்கள் பாராட்டி உள்ளனர்.

இது சரித்திரக் கதையைப் பின்னணியாகக் கொண்டு உருவாகும் படம் என்று கூறப்படுகிறது. பழங்காலத்தில் தவறு செய்பவர்களைக் கழுவில் ஏற்றி தண்டிக்கும் வழக்கம் இருந்தது. இந்தப் படத்தில் அது தொடர்பாக அலசுகிறார்களாம். 

மனதில் காதலை வளர்த்துக்கொண்டு வில்லத்தனம் செய்யும் கதாபாத்திரத்தில் ரெஜினா நடிப்பதாகத் தகவல். தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் தயாராகும் இந்தப் படத்தில் மன்சூர் அலிகான், கிஷோர், அர்ச்சனா கௌடா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களை ஏற்றுள்ளனர்.

0 விளக்கவுரை அளி
0

related posts

Leave a Comment