Home உலகச் செய்திகள் மானியப் பறிப்பை, ‘மிச்சம்’ எனக் கூறும் மோடி அரசு

மானியப் பறிப்பை, ‘மிச்சம்’ எனக் கூறும் மோடி அரசு

by Thushyanthy Nirooshan

“இந்திய அரசின் நேரடி மானியப் பரிவர்த்தனை (டிபிடி) பற்றி உலகமே பேசுகிறது. நிச்சயம் இது பெரிய புரட்சிதான். நேரடி மானியப் பரிவர்த்தனை மூலம் ரூ. 1 லட்சம் கோடி சேமிக்க முடிவது என்பது சாதாரண விஷயமல்ல” என்றுமத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்சில நாட்களுக்கு முன்பு கூறியிருந்தார்.

மேலும், “நவீன தொழில் நுட்பங் களின் வழியே ஊழல்கள், மோசடிகள் களையப்பட்டுள்ளன” என்றும் பெருமைபேசியிருந்தார். அதற்கு சில நாட்களுக்கு முன்னர்தான், சமையல் எரிவாயு சிலிண்டர் களுக்கான மானியத்தை மக்களின் வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்தும்திட்டத்தால், அரசுக்கு ரூ. 28 ஆயிரத்து 700 கோடி வரை ‘மிச்சம்’ என்று பெட்ரோலியத்துறை அமைச்சகம் தெரிவித்திருந்தது. 2019-20 நிதியாண்டில் பொது உணவு வழங்கல் திட்டத்தின் கீழும் இதேபோல ரூ. 19 ஆயிரத்து 200 கோடி ‘மிச்சம்’செய்யப்பட்டு உள்ளதாக கூறப்பட்டிருந்தது. 

இந்நிலையில், பயனாளிகளை எல்லாம் கழித்துக் கட்டிவிட்டு, அதாவது உரியவர்களுக்கு மானியத்தையே வழங்காமல்தான், ரூ. 1 லட்சம் கோடிமிச்சம் என்று மோடி அரசு ஏமாற்றுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.சமையல் எரிவாயு மானியத்தையே இதற்கு உதாரணமாக எடுத்துக் கொள்ளலாம். ஏனெனில், கோடிக்கணக்கானோர் சிலிண்டர்களை நிரப்புவதில்லை. பல லட்சம் பயனாளிகளுக்கு மானியமே போய்ச் சேர்வதில்லை.ஆண்டொன்றுக்கு, பொதுமக்கள் பயன்படுத்தும், 14.2 கிலோ எடை கொண்ட 12 சிலிண்டர்களுக்கு அரசுத்தரப்பிலிருந்து மானியம் வழங்கப்பட்டு வருகிறது. ஒவ்வொரு மாதமும், சர்வதேசச் சந்தை நிலவரத்தைப் பொறுத்து மானியத் தொகை மக்களின் வங்கிக்கணக்கில் செலுத்தப்படும். 12 சிலிண்டர் களுக்கு மேல் போகும்பட்சத்தில், சந்தைவிலையில் மக்கள் வாங்கிக் கொள்ள வேண்டும். 

இவ்வாறு வழங்கப்படும் மானியத்தில் தான் ரூ. 28 ஆயிரத்து 700 கோடிமிச்சமாகி இருப்பதாக பெட்ரோலியத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. 2019-20 நிதியாண்டின் ஏப்ரல் முதல் டிசம்பர் வரையிலான ஒன்பது மாதங்களில் மட்டும் இவ்வளவு தொகை சேமிக்கப்பட்டு இருப்பதாகவும் கூறியுள்ளது.ஆனால், பிரதமரின் உஜ்வாலா யோஜனா திட்டத்தின் கீழ் சுமார் 8 கோடிக்கும் அதிகமானோர், சமையல்சிலிண்டர் இணைப்புபெற்ற நிலையில்,அவர்களில் 76 சதவிகிகித வாடிக்கை
யாளர்கள் மீண்டும் சமையல் எரிவாயுநிரப்புவதில்லை என்பதுதான் உண்மைதான். அப்படியே நிரப்பினாலும் ஆண்டுக்கே2 அல்லது 3 முறை மட்டுமே எரிவாயுநிரப்புகின்றனர். உஜ்வாலா திட்டத்தின் முதல் பயனாளி என்று மோடி அரசால் பேனர்களில் விளம்பரப்படுத்தப்பட்ட குந்திதேவி என்பவரே 3 ஆண்டுகளுக்கும் சேர்த்து மொத்தமாக பெற்றதுவெறும் 11 சிலிண்டர்கள்தான். உண்மையில் அவர் 36 சிலிண்டர்கள் பெற்றிருக்கவேண்டும்.

ஆனால், வேலையின்மை, வறுமை,விலைவாசி உயர்வு போன்றவை காரணமாக குந்திதேவி போன்ற கோடிக்கணக்கானோர் சிலிண்டர்களைப் விலைக்கு வாங்க முடிவதில்லை. இவ்வாறு ‘வாங்காத’ சிலிண்டர்களுக்கு ‘வழங்கப் படாத’ மானியத்தைத்தான் ‘மிச்சம்’ என்றுநிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கணக்கு காட்டியுள்ளதாக கூறப்படுகிறது.அதுமட்டுமல்ல, நிர்மலா சீதாராமன்கூறியதுபோல, வங்கி மூலமான நேரடிமானியத் திட்டம் முறைகேடுகளையும் தடுத்து விடவில்லை. இதனை அண்மையில், அதிகாரி ஒருவர் புள்ளிவிவரங்களுடன் அம்பலப்படுத்தினார்.ஒரு பயனாளிக்கு ‘ஆண்டு ஒன் றுக்கே’ 12 சிலிண்டர்கள்தான் மானிய விலையில் வழங்கப்படுகின்றன. ஆனால், 2 லட்சத்து 61 ஆயிரம் வறுமைக்
கோட்டுக்கு கீழுள்ள பயனாளிகளின் பெயரில், ‘நாள் ஒன்றுக்கு’ 2 மானியசிலிண்டர்கள் விகிதம் பெறப்பட்டதையும், இவ்வாறு மொத்தம் 3 லட்சம்முறை சிலிண்டர்கள் பெறப்பட்டிருப்பதையும் அந்த அதிகாரி வெளிச்சத்திற்கு கொண்டு வந்தார்.

அதுமட்டுமல்ல, 1,300-க்கும் மேற்பட்ட நுகர்வோர் பெயரில், தினமும் 12 சிலிண்டர்கள் வரை வழங்கப்பட்டுள் ளன. சுமார் 7,000 பேர்களின் பெயரில்ஒவ்வொரு நாளும் நான்கு சிலிண்டர்கள் வழங்கப்பட்டுள்ளன. 4,000 பேர், தினமும்ஐந்து சிலிண்டர்களை வாங்கியுள்ளனர். 2016 முதல் 2018 வரையிலான காலத்தில், இவ்வாறு 2.98 லட்சம் பயனாளிகள் மாதத்திற்கு 2 முதல் 20 சிலிண்டர்கள் வரை பெற்றிருந்தனர் என்றும் அவர் பட்டியலை வெளியிட்டார். ஆனால், இவற்றையெல்லாம் மறைத்துவிட்டுத்தான் ரூ. 1 லட்சம் கோடிமானியத்தை மிச்சப்படுத்தி இருப்பதாக நிர்மலா சீதாராமன் தற்போது பெருமை பீற்றியுள்ளார்.

0 விளக்கவுரை அளி
0

related posts

Leave a Comment