சிம்பு நடிப்பில் வெங்கட்பிரபு இயக்கி வரும் ‘மாநாடு’ திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த சில நாட்களாக சென்னையில் நடைபெற்ற நிலையில் தற்போது இந்த படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு ஐதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் நடைபெற்று வருகிறது
இந்த நிலையில் இந்த படத்தில் இயக்குனர் பாரதிராஜா, இயக்குனர் எஸ்ஏ சந்திரசேகர், பிரேம்ஜி அமரன், கருணாகரன், உள்ளிட்ட பலர் நடித்து வருவதாக ஏற்கனவே வெளியான செய்தியை பார்த்தோம். மேலும் பாரதிராஜாவின் மகன் மனோஜ் பாரதியும் ஒரு முக்கிய கேரக்டரில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது .
இந்த நிலையில் இன்று சிம்பு மற்றும் மனோஜ் பாரதி நடித்த காட்சிகள் சமீபத்தில் படமாக்கப்பட்டது. மனோஜ் பாரதி இந்த படத்தில் போலீஸ் கேரக்டரில் நடித்து வருகிறார் என்பது தற்போது உறுதியாகியுள்ளது. போலீஸ் வேடத்தில் உள்ள மனோஜ் பாரதி ஆகிய சிம்பு இருவரும் இருக்கும் புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வலம் வருவதை அடுத்தே மனோஜ் பாரதி போலீஸ் கேரக்டரில் நடித்து வருகிறார் என்பது உறுதியாகியுள்ளது.
சிம்பு ஜோடியாக கல்யாணி பிரியதர்ஷன் நடித்துவரும் இந்த படத்தில் வில்லனாக எஸ்ஜே சூர்யா நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. யுவன் ஷங்கர் ராஜாவின் இசையில் சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் உருவாகிவரும் இந்த படம் இவ்வருட இறுதியில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.