உலக நாடுகள் மத்தியில் கரோனா வைரஸ் தாக்குதல் அச்சம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் சூழலில் பாதிப்பை கணிக்கத் தவறியதற்காக உலக சுகாதார அமைப்பு மன்னிப்பு கேட்டுள்ளது.
உலகம் முழுவதும் கரோனா வைரஸ் கடும் பீதியை ஏற்படுத்தி உள்ளது. நோய்க்கான மருத்து களை தயாரிக்கும் முயற்சியில் ஆய்வாளர்கள் முழு வீச்சில் ஈடுபட்டுள்ளனர். 17 நாடுகளில் இந்த வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் கரோனா வைரஸ் பாதிப்பால் சீனாவில் மட்டும் 106 பேர் பலியாகியுள்ளனர். சீனாவின் தேசிய சுகாதார ஆணையத்தின் தகவல் படி திங்கள்கிழமை வரை சீனாவின் வுகானில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,515 ஆக இருந்தது. உறுதிப்படுத்தப்பட்ட பாதிப்புகள் பெரும்பாலானவை ஹூபே மாகாணத்தில் உள்ளன. அங்கு மட்டும் இதுவரை 2714 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். . ஒரு நாளில் கிட்டத்தட்ட 65 சதவீதம் இந்த பாதிப்பு பரவி உள்ளது.
இந்நிலையில் கரோனா வைரஸ் குறித்து கடந்த வாரம் உலக சுகாதார அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் உலக நாடுகள் பதற்றம் அடைய தேவை இல்லை. இது மிதமான நிலையிலேயே உள்ளது என அறிக்கை வெளியிட்டிருந்தது. இந்நிலையில் தற்போது சீனாவில் 100க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். மேலும் ஐரோப்பாவுக்கம் அமெரிக்காவுக்கம் கரோனா வியாதி அச்சுறுத்தலை ஏற்படுத்த தொடங்கியதையடுத்து கரோனா வைரஸின் தீவிரத்தை கணிக்கத் தவறி விட்டோம் என உலக சுகாதார அமைப்பு முதல் முறையாக தங்கள் தவறை ஒப்புக் கொண்டு மன்னிப்பு கோரி உள்ளது.