Home இலங்கைச் செய்திகள் மண்மேடு சரிந்து விழுந்ததில் ஒருவர் பலி

மண்மேடு சரிந்து விழுந்ததில் ஒருவர் பலி

by Thushyanthy Nirooshan

மஹவெல பொலிஸ் பிரிவின் ஏ9 பிரதான வீதியின் மடவல உல்பத பிரதேசத்தில் மண்மேடு சரிந்து விழுந்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

நேற்று (05) காலை 10.30 மணியளவில் இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளது.

குடிநீர்த்திட்டம் ஒன்றிற்காக நீர் குழாய் பொருத்துவதற்காக குழி தோண்டும் பணியில் ஈடுபட்டிருந்த போது இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது.

சம்பவத்தில் படுகாயமடைந்த நபர் மாத்தளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் 59 வயதுடைய குடாகம, எலஹெர பிரதேசத்தை சேர்ந்தவராவார்.

உயிரிழந்தவரின் சடலம் மாத்தளை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ள நிலையில், மஹவெல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

0 விளக்கவுரை அளி
0

related posts

Leave a Comment