இன்று மார்ச் 8ஆம் தேதி மகளிர் தினம் உலகம் முழுவதும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வரும் நிலையில் சென்னையில் பெண்கள் பங்கேற்கும் விழிப்புணர்வு பேரணி ஒன்றை லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா தொடங்கி வைத்து சிறப்பித்தார்
இன்று சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு வருமான வரித்துறை மற்றும் தனியார் தொண்டு நிறுவனம் ஆகியவை சார்பில் பெண்கள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு பேரணி ஒன்று சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில் நடைபெற்றது. இந்த பேரணியில் கல்லூரி மாணவிகள் உள்பட ஆயிரக்கணக்கான பெண்கள் பங்கேற்றனர். இந்த பேரணியை நடிகை நயன்தாரா கொடியசைத்து தொடக்கி வைத்தார்.
இந்த பேரணியில் கலந்துகொண்ட மாணவிகள் பிங்க் நிற உடை அணிந்து பெண்கள் பாதுகாப்பு குறித்த வாசகங்கள் அடங்கிய பதாதைகளை ஏந்தி சென்றனர். சென்னை ராஜரத்தினம் மைதானம் அருகே தொடங்கிய பேரணி எத்திராஜ் சாலை வழியாக கல்லூரி சாலை வழியாக 5கி.மீ சென்று நுங்கம்பாக்கத்தில் நிறைவடைந்தது என்பது குறிப்பிடத்தக்கது.