கடந்த 2015 ஆம் ஆண்டு ’36 வயதினிலே’ என்ற படத்தின் மூலம் மீண்டும் ரீ எண்ட்ரி ஆன நடிகை ஜோதிகா, அதன்பின்னர் ’ராட்சசி’ ’ஜாக்பாட்’ மற்றும் ‘தம்பி’ உள்பட பல திரைப்படங்களில் நடித்தார். அந்த வகையில் ஜோதிகா தற்போது நடித்து முடித்துள்ள திரைப்படம் தான் ’பொன்மகள் வந்தாள்’
ஜே.ஜே.ப்ரட்ரிக் இயக்கத்தில் சூர்யாவின் 2 எண்டர்டெயின்மெண்ட் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகியுள்ள ’பொன்மகள் வந்தாள்’படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்த நிலையில் தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகளும் முடிவடைந்து மார்ச் 27ஆம் தேதி இந்த படம் வெளியாகும் என சமீபத்தில் அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் இன்று மகளிர் தினத்தை முன்னிட்டு இந்த படத்தின் இரண்டாவது லுக் போஸ்டர் சற்றுமுன் வெளியாகி ரசிகர்களின் பேராதரவை பெற்று வருகின்றது. ஜோதிகா வழக்கறிஞர் கெட்டப்பில் உள்ள இந்த லுக் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
ஜோதிகா வழக்கறிஞராக நடித்துள்ள இந்த படத்தில் அவடன் கே பாக்கியராஜ், பார்த்திபன், தியாகராஜன், பிரதாப்போத்தன், பாண்டியராஜன் உள்பட பலர் நடித்துள்ளனர். ராம்ஜி ஒளிப்பதிவில், கோவிந்த் வசந்தா இசையில் இந்த படம் உருவாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது