பேருந்தில் ஏறுவதற்கு முயற்சித்த வயதான பெண் ஒருவா் பேருந்து சக்கரத்திற்குள் விழுந்த நிலையில் உடல் நசுங்கி பலியாகியுள்ளாா்.
இந்த சம்பவம் காலி இமா இமதூவ பிரதேசத்தில் இன்று இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடா்பாக மேலும் தொியவருவதாவது,
66 வயதான பெண் தனியாா் பேருந்து ஒன்றில் ஏறுவதற்கு முயற்சித்துள்ளாா். இதனை பொருட்படுத்தாத பேருந்தின் சாரதி மற்றும் நடத்துனா்,
பேருந்தை செலுத்திய நிலையில் வயதான பெண் பேருந்தின் சக்கரத்திற்குள் விழுந்து உடல் நசுங்கி உயிாிழந்துள்ளாா்.