கடந்த ஜனவரி மாதம் 14ஆம் தேதி துக்ளக் இதழின் பொன்விழா ஆண்டு விழா நடைபெற்றது. இந்த விழாவில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பேசும்போது 1971ஆம் ஆண்டு சேலத்தில் பெரியார் தலைமையில் நடைபெற்ற பேரணி குறித்து சில கருத்துகளை தெரிவித்தார்.
ரஜினிகாந்தின் இந்த கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் திராவிடர் விடுதலை இயக்கத்தினர் சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. பெரியார் குறித்து பொய்யான தகவலை ரஜினிகாந்த் பரப்புவதாக அந்த புகாரில் குறிப்பிடப்பட்டிருந்தன.
இந்த வழக்கின் விசாரணை கடந்த சில நாட்களாக நடைபெற்றது. ரஜினிகாந்த் பேசியதற்கு ஆதாரம் இருப்பதாக ரஜினியின் வழக்கறிஞரும், பெரியார் குறித்து அவதூறாக பேசியதாக திராவிடர் விடுதலை இயக்கத்தின் வழக்கறிஞரும் வாதாடினர்.
இருதரப்பு வாதத்தை கேட்ட சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி இந்த வழக்கு தள்ளுபடி செய்யப்படுவதாக உத்தரவு பிறப்பித்தார். தந்தை பெரியார் குறித்து அவதூறாக பேசியதாக ரஜினிகாந்த் மீது திராவிடர் கழகம் தொடர்ந்த வழக்கு தள்ளுபடி செய்யப்படுவதாக நீதிபதி தனது தீர்ப்பில் குறிப்பிட்டார். ரஜினியும் பேச்சால் எந்த ஒரு சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படாத நிலையில் அவர் மீது வழக்கு பதிவு செய்ய உத்தரவிட முடியாது என்று நீதிபதி தனது உத்தரவில் குறிப்பிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.