Home சினிமா செய்திகள் பிரபல நடிகரின் படத்தில் இணைந்த சின்னிஜெயந்த்!

பிரபல நடிகரின் படத்தில் இணைந்த சின்னிஜெயந்த்!

by Thushyanthy Nirooshan

கடந்த 1984ஆம் ஆண்டு ரஜினிகாந்த் நடிப்பில் பாலுமகேந்திரா இயக்கிய ’கை கொடுக்கும் கை’ என்ற திரைப்படத்தில் அறிமுகமான நடிகர் சின்னிஜெயந்த், சமீபத்தில் ரஜினிகாந்த் நடித்த ’பேட்ட’ திரைப்படம் வரை நூற்றுக்கணக்கான படங்களில் காமெடி மற்றும் குணசித்திர வேடங்களில் நடித்திருந்தார் என்பது தெரிந்ததே.

இந்த நிலையில் தற்போது அவர் விஜய் சேதுபதி நடித்து வரும் ’யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என்ற படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்க இணைந்துள்ளார். இந்த தகவலை இயக்குனர் வெங்கட்பிரபு தனது சமூக வலைத்தளத்தில் அறிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இயக்குனர் எஸ்பி ஜனநாதன் அவர்களின் உதவியாளர் வெங்கடகிருஷ்ணன் ரோஹ்நாத் என்பவர் இயக்கி வரும் இந்தப் படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக மேகா ஆகாஷ் நடித்து வருகிறார். மேலும் இந்த படத்தில் இயக்குனர் மோகன் ராஜா மற்றும் மகிழ்திருமேனி உள்பட பலர் நடித்து வருகின்றனர் இந்த படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு தற்போது கொடைக்கானலில் நடைபெற்று வருகிறது. இன்னும் ஒரு சில நாட்களில் இந்த படத்தின் மொத்த படப்பிடிப்பும் முடிவடைந்து விடும் என்றும் அதன் பின்னர் இந்த படத்தின் போஸ்ட் புரடொக்ஷன் பணிகள் தொடங்கும் என்றும் கூறப்படுகிறது.

சந்திரா ஆர்ட்ஸ் நிறுவனம் தயாரித்து வரும் இந்த படத்திற்கு நிவாஸ் கே பிரசன்னா இசையமைத்து வருகிறார் வெற்றிவேல் மகேந்திரன் என்பவர் ஒளிப்பதிவு செய்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

0 விளக்கவுரை அளி
0

related posts

Leave a Comment