Home இலங்கைச் செய்திகள் பாடசாலை முதலாம் தவணை விடுமுறை நாளை முதல் ஆரம்பம்

பாடசாலை முதலாம் தவணை விடுமுறை நாளை முதல் ஆரம்பம்

by Thushyanthy Nirooshan

கொரோனா வைரஸின் காரணமாக நாட்டில் உள்ள அனைத்து பாடசாலைகளும் நாளை முதல் ஏப்ரல் மாதம் 20 ஆம் திகதி வரையில் மூடப்படவுள்ளன.

ஏப்ரல் மாதம் 6 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள பாடசாலை முதலாம் தவணை விடுமுறையை நாளை முதல் வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டிருப்பதாக கல்வி அமைச்சர் டளஸ் அழகப்பெரும இன்று தெரிவித்துள்ளார்.

இதற்கு அமைவாக நாளை முதல் ஏப்ரல் 20 ஆம் திகதி வரையில் அனைத்து பாடசாலைகளும் மூடப்படுவுள்ளதாகவும் கல்வி அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

இந்த விடுமுறை அறிவிப்பு தொடர்பில் இன்று நடைபெற்ற செய்தியாளர்களுனான சந்திப்பில் கருத்து தெரிவித்த அமைச்சர் தனியார் பாடசாலைகள் மற்றும் மேலதிக வகுப்புக்களை நடத்துவோர் விடுமுறை தொடர்பில் அவர்களே தீர்மானங்களை எடுக்கவேண்டும் என்றும் தெரிவித்தார்.

அவர்களுக்கு எம்மால் உத்தரவு பிறப்பிக்க முடியாது என்றும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.

0 விளக்கவுரை அளி
0

related posts

Leave a Comment