Home இலங்கைச் செய்திகள் நீர்கொழும்பு சம்பவத்துடன் தொடர்புடைய 6 பேர் பொலிஸில் சரண்

நீர்கொழும்பு சம்பவத்துடன் தொடர்புடைய 6 பேர் பொலிஸில் சரண்

by Thushyanthy Nirooshan

நீர்கொழும்பு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஹோட்டல் ஒன்றில் ஏற்பட்ட மோதல் சம்பவத்துடன் தொடர்புடைய 6 பேர் பொலிஸ் நிலையத்தில் சரண் அடைந்துள்ளனர்.

இன்று (10) பிற்பகல் சட்டத்தரணிகளின் ஊடாக அவர்கள் நீர்கொழும்பு பொலிஸ் நிலையத்தில் சரண் அடைந்துள்ளனர்.

குறித்த சம்பவம் தொடர்பில் இன்று (10) காலை 18 வயதுடைய நீர்க்கொழும்பு, பெரியமுல்ல பிரதேசத்தை சேர்ந்த இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டிருந்தார்.

அதனடிப்படையில் சம்பவத்துடன் தொடர்புடைய 7 பேரும் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சந்தேக நபர்கள் நாளை (11) நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட உள்ளனர்.

பெரியமுல்ல பிரதேசத்தில் அமைந்துள்ள ஹோட்டல் ஒன்றிற்கு நேற்றிரவு (09) 9.30 மணியளவில் வருகை தந்த குழுவொன்று குறித்த ஹோட்டலில் மது அருந்த முயற்சித்துள்ள போது ஹோட்டல் உரிமையாளர் மற்றும் ஊழியர்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

பின்னர் குறித்த குழுவினர் ஹோட்டல் உரிமையாளர் மற்றும் ஊழியர்களுடன் மோதலில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மோதலின் போது உரிமையாளரையும் மற்றும் அதன் ஊழியர்கள் சிலரையும் கூரிய ஆயுதத்தால் தாக்கிய குறித்த கும்பல் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளது.

தாக்குதலுக்கு உள்ளான 5 பேர் படுகாயமடைந்த நிலையில் நீர்க்கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதை அடுத்து அதில் ஒரு ஊழியர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

36 வயதுடைய கனேவெல்பொல, கெகிராவை பிரதேசத்தை சேர்ந்த நபரொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் நீர்கொழும்பு பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

0 விளக்கவுரை அளி
0

related posts

Leave a Comment