நாய் வைத்திருப்போருக்கு ஜெனீவா மாகாண கால்நடைகள் நல அலுவலகம் எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது.
நாய் உரிமையாளர்கள் தங்கள் நாய்களை விவசாய நிலங்களுக்குள் அனுமதிக்கக்கூடாது என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நாய்கள் வயல்களில் மலம் கழித்தால், அதனால் கால்நடைகளுக்கு நச்சுத்தன்மை பாதிப்பு ஏற்படுவதோடு, உணவுப்பயிர்களும் பாதிக்கப்படும்.
ஆகவே நாய் உரிமையாளர்கள் தங்கள் நாய்களை விவசாய நிலங்களுக்குள் அனுமதித்தால், அவர்களுக்கு 60,000 சுவிஸ் ஃப்ராங்குகள் வரை அபராதம் விதிக்கப்படும் என ஜெனீவா மாகாண கால்நடைகள் நல அலுவலகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.