விக்னேஷ் சிவன் இயக்கிய ‘நானும் ரவுடிதான்’ என்ற படத்தில் காமெடி கேரக்டரில் நடித்திருந்த நடிகர் லோகேஷ் சமீபத்தில் உடல்நலமின்றி மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் அவருக்கு பண உதவி தேவை என்றும் செய்திகள் வெளியானது
இந்த நிலையில் லோகேஷ் தற்போது சிகிச்சையின் காரணமாக உடல்நிலை தேறி வருவதாகவும் விரைவில் குணமாகி வீடு திரும்புவார் என்றும் அவரது நண்பர்கள் தெரிவித்தனர் என்ற செய்தியை ஏற்கனவே பார்த்தோம்.
இந்த நிலையில் மக்கள் செல்வன் விஜய்சேதுபதி இன்று லோகேஷை அவர் சிகிச்சை பெற்று வரும் மருத்துவமனைக்கு சென்று அவரிடம் உடல்நலம் விசாரித்தார். மேலும் லோகேஷின் சிகிச்சைக்கு நிதியுதவியும் அளித்து உதவினார். இதனையடுத்து லோகேஷின் குடும்பத்தினர் விஜய்சேதுபதிக்கு நன்றி தெரிவித்து கொண்டனர். மேலும், சில நிமிடங்கள் அவரிடம் நலம் விசாரித்துப் பேசிக் கொண்டிருந்த விஜய்சேதுபதி விரைவில் குணமாகி நடிக்க வரவேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.