Home சினிமா செய்திகள் நடக்கும் என்பார் நடக்காது: கஸ்தூரிக்கு கிடைத்த அதிரடி வெற்றி

நடக்கும் என்பார் நடக்காது: கஸ்தூரிக்கு கிடைத்த அதிரடி வெற்றி

by Thushyanthy Nirooshan

அஜித் ரசிகர்களுக்கும் நடிகை கஸ்தூரிக்கும் இடையே சமூக வலைதளங்களில் அவ்வப்போது மோதல் ஏற்பட்டு வந்த நிலையில் கடந்த 2 நாட்களாக அஜித் ரசிகர்கள் என்ற போர்வையில் ஒரு சிலர் நடிகை கஸ்தூரியை அவமதிக்கும் வகையில் பதிவுகளை செய்து வந்தனர். இதனால் ஆத்திரமடைந்த நடிகை கஸ்தூரி, அஜீத் மற்றும் அவரது மேனேஜர் ஆகிய இருவருக்கும் வேண்டுகோளை விடுத்தார். அஜித்தின் மௌனம் காரணமாகத்தான் அவரது ரசிகர்கள் அதிக ஆட்டம் போடுவதாகவும் அவர் தனது சமூக வலைத்தளத்தில் குறிப்பிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தன்னை அவமதிக்கும் வகையில் சமூக வலைதளங்களில் பதிவு செய்தவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று டுவிட்டர் இந்தியாவுக்கும், தமிழக காவல்துறைக்கும் அவர் தனது தனது டுவீட்டை டேக் செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

கஸ்தூரியின் இந்த நடவடிக்கை உடனடியாக வேலை செய்துள்ளது. கஸ்தூரியை அவமதிக்கும் வகையில் ஆபாசமான பதிவு செய்தவரின் டுவிட்டர் கணக்கு, டுவிட்டர் நிர்வாகத்தால் முடக்கப்பட்டுள்ளது.

இதனை அடுத்து கஸ்தூரிக்கு இந்த விஷயத்தில் வெற்றி கிடைத்துள்ளதாக கருதப்படுகிறது. இது குறித்து தனது சமூக டுவிட்டர் பக்கத்தில் கூறிய நடிகை கஸ்தூரி, ‘ நடக்கும் என்பார் நடக்காது நடக்காதென்பார் நடந்துவிடும் போட்றா வெடிய’ என்று குஷியுடன் ஒரு டுவீட்டை பதிவு செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

0 விளக்கவுரை அளி
0

related posts

Leave a Comment