Home இலங்கைச் செய்திகள் தேர்தல் முடிவடைந்த பின் விரைவாக மாகாண சபைத் தேர்தல் – பிரதமர்

தேர்தல் முடிவடைந்த பின் விரைவாக மாகாண சபைத் தேர்தல் – பிரதமர்

by Thushyanthy Nirooshan

பொதுத் தேர்தல் முடிவடைந்த பின்பு முடியுமானளவு விரைவாக மாகாண சபைத் தேர்தலை நடாத்த வேண்டும் என பிரதம அமைச்சர் மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் தெரிவித்தார்.

இம்முறை தேர்தலில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை அதிகாரத்தைப் பெற்றுக்கொண்ட பின்பு நாட்டிற்குப் பொருத்தமான புதிய அரசியலமைப்பொன்றைச் சமர்ப்பிக்க எதிர்பார்ப்பதாகவும் பிரதம அமைச்சர் குறிப்பிட்டார்.

நேற்று (2020.03.06) அலரி மாளிகையில் பத்திரிகைச் செய்தியாசிரியர்கள், சிறப்பு அம்சப் பிரிவு ஆசிரியர்கள், அரசியல் கட்டுரையாளர்கள் மற்றும் காட்டூன் கலைஞர்களை சந்தித்த சந்தர்ப்பத்திலேயே பிரதம அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

இதன்போது ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகள் மற்றும் பிரதம அமைச்சர் வழங்கிய பதில்கள் பின்வருமாறு.

ஊடகங்கள் – கடந்த ஜனாதிபதித் தேர்தலின்போது நாம் ஒரு ஒழுக்கரீதியான தன்மையைக் கண்டோம். இளம் சந்ததியினர் படித்த புத்திஜீவிகள் தொடர்பாக மதிப்பீடொன்றைச் செய்தனர். எனினும் இந்தத் தேர்தலின்போது ஒருவரையொருவர் விமர்சித்துக்கொள்வதைக் காண முடிகிறது.

பிரதம அமைச்சர் – வேட்பாளர்கள் மத்தியில் தான் விமர்சனங்கள் இடம்பெறுகின்றன. இந்த தேர்தல் முறைமையில் விருப்பு வாக்குகளுக்கான யுத்தமே காணப்படுகிறது. யூ.என்.பி. யினர் எம்மைத் திட்டுவதில்லை. தம்முடைய தரப்பினர் தமது தரப்பினரையே தாழ்த்தி விடுகின்றனர். நான் போட்டியிடுவதாயின் என்னையும் தாழ்த்துவர். தந்தை மகன் எனும்போது கூட நிலைமை இவ்வாறு தான்.  ஒருவர் ஏதாவது கூறினால் மற்றையவர் அதற்குப் பதிலளிக்கிறார். அடித்தாலும் மறுபக்கத்தைப் பார்த்துக் கொள்வது தான் எனது பழக்கம்.

ஊடகங்கள் – ஜனாதிபதியாக கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் தெரிவானதன் பின்பு ஒரு ஒழுக்கரீதியான தன்மையைக் காண முடிந்தது. தற்போது பழைய 225 பேருமே ஒரே மாதிரி தான் என எண்ணத் தோன்றுகிறது.

பிரதம அமைச்சர் – ஒருவரையொருவர் விமர்சித்துக் கொள்ளாது தொகுதியை வெற்றி பெறச் செய்யுமாறு தான் நாம் கூறியுள்ளோம். வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்ட பின்பு வேட்பாளர்களை மீண்டும் அறிவுறுத்துவோம்.

பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் அவர்கள் – தற்போது நிலவும் முறைமையை மாற்றியமைப்பது ஒரு சமூகத் தேவையாகும். அழிவை ஏற்படுத்துகின்ற இந்த முறைமையை மாற்றியமைப்பதற்கே மூன்றில் இரண்டு அதிகாரம் தேவைப்படுகிறது.

ஊடகங்கள் – பட்டதாரிகளுக்குத் தொழில் வழங்குவதைத் தேர்தல்கள் ஆணைக்குழு நிறுத்தியுள்ளது.

பந்துல குணவர்தன அவர்கள் – அரசியலற்ற ஒரு வேலைத்திட்டத்தினையே பிழையாக சமூகமயப்படுத்த முயற்சிக்கின்றனர். தான் அதிகாரத்திற்கு வந்தவுடன் பட்டதாரிகளுக்குத் தொழில் வழங்குவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ கூறுகிறார்.  ஏற்கனவே ஜனாபதிதி செயலகம் பட்டதாரிகளுக்கு நியமனக் கடிதங்களை அனுப்பி விட்டது. ஜனாதிபதித் தேர்தலின்போது வழங்கப்பட்ட வாக்குறுதியே அவ்வாறு நிறைவேற்றப்பட்டுள்ளது. இதன்போது கட்சி, நிறம் பார்க்கப்படவில்லை. இது அமைச்சரவையில் கலந்துரையாடி மேற்கொள்ளப்பட்ட தீர்மானம் ஆகும். பயிலுநர்களாக இணைத்துக்கொண்டு தலைமைத்துவப் பயிற்சி மற்றும் இடரீதியான பயிற்சி வழங்கப்படும். பயிற்சிக் காலத்தில் இருபதாயிரம் ரூபாய் வழங்கப்படும். இந்தப் பணிகள் இடம்பெறும்போது தான் தேர்தல்கள் ஆணைக்குழு பட்டதாரகளின் பயிற்சியை நிறுத்தியுள்ளது.

பிரதம அமைச்சர் – தேர்தல்கள் ஆணைக்குழு தலையிட்டு பயிற்சியை நிறுத்திய போதிலும் இணைத்துக்கொண்ட பட்டதாரிகளுக்குச் சம்பளம் வழங்க வேண்டும். சம்பளம் கிடைக்கும். பயிற்சி இல்லாமற் போகும்.  பந்துல குணவர்தன அவர்கள் – அதிகாரிகள் அச்சப்படுகின்றனர். தேர்தல்கள் ஆணைக்குழு கூறுவதனையே அதிகாரிகள் செய்கின்றனர். நியமனக் கடிதம் கிடைத்தவுடன் நியமனத்தைப் பொறுப்பேற்றதாக பிரதேச செயலகத்தில் கையொப்பமிட வேண்டும். நியமனம் கிடைக்காவிடின் பிரதேச செயலாளருக்கு மேன்முறையீடுகளை அனுப்பி வைக்க வேண்டும்.

ஊடகங்கள் – பட்டதாரிகள் இது தொடர்பாக நீதிமன்றத்தை நாடுவதற்கான வாய்ப்பு உள்ளது தானே?

பிரதம அமைச்சர் – நீதிமன்றத்தை நாடி ஏன் அந்தளவு செலவு செய்ய வேண்டும். சம்பளத்தை எடுத்துக்கொண்டு இரண்டு மாத காலம் வீட்டில் இருந்து விட்டு அதன் பின்பு தொழிலுக்கு வருவதே அந்தப் பிள்ளைகளுக்கு நன்மை பயக்கும்.

பந்துல குணவர்தன அவர்கள் – மக்களுக்கு கிடைக்க வேண்டியவற்றைத் தடுக்கின்ற ஒரு எதிர்க்கட்சித் தலைவரை இப்போது தான் காண்கிறோம். அவர்களின் கம்பெரலிய வேலைத்திட்டத்திற்கான பணத்தினை வழங்க இடைக்காலக் கணக்கறிக்கையொன்றைச் சமர்ப்பிக்கும்போது அது வேண்டாம் என்கின்றனர். பட்டதாரிகளுக்குத் தொழில் வழங்கும்போது அதனை வேண்டாம் என்கின்றனர். எதிர்க்கட்சி இவ்வாறு செயற்படுவதனை ஏற்றுக்கொள்ள முடியாது.

பிரதம அமைச்சர் – அவர் வாய்க்கு வருவதையெல்லாம் கூறுகிறார். அவர் உள்வீட்டுப் பிரச்சினைகளைத் தீர்த்துக்கொள்ள வேண்டிய நிலையில் உள்ளார்.

பிரதம அமைச்சர் – இதனால் பட்டதாரிகளுக்கு எவ்விதமான பிரச்சினையும் ஏற்பட மாட்டாது.

பந்துல குணவர்தன அவர்கள் – பட்டதாரிகள் தமக்குரிய இடங்களுக்குச் சென்று நியமனத்தைப் பொறுப்பேற்றதாக கையொப்பமிட வேண்டும். நியமனக் கடிதங்கள் கிடைக்காதவர்கள் மேன்முறையீடு செய்யுங்கள்.

ஊடகங்கள் – கட்சியைச் சேர்ந்த சிலர் தெரிவிக்கும் கருத்துக்கள் நாட்டிற்கும், நடைபெறவுள்ள தேர்தலுக்கும் தடங்கலாக அமையும் போலத் தெரிகிறது. ஒரு அமைச்சரின் கருத்து காரணமாக புகையிரத சாரதிகள் பணிப் பகிஷ;கரிப்பில் ஈடுபடத் தீர்மானித்தனர். பிரதம அமைச்சர் தலையிட்டு அதனைத் தீர்த்துவைத்தார். இப்படியே சென்றால் எதிர்காலத்தில் என்ன நடக்கும்.

பிரதம அமைச்சர் – வாய்க்கு வருதையெல்லாம் கூறுகின்றனர். தேர்தல்களின்போது அவருக்குக் கொடுக்க வேண்டாம், இவருக்குக் கொடுக்க வேண்டாம் எனக் கூறும் பழக்கம் எப்போதும் உள்ளது.

ஊடகங்கள் – அரச அதிகாரிகளின் நிலைமை ஆபத்தானதாக உள்ளதல்லவா?

பிரதம அமைச்சர் – அது உண்மை தான். அரச அதிகாரிகள் தொடர்பாக கருத்துத் தெரிவிக்கும்போது சற்று அவதானமாக இருக்க வேண்டும். நீங்கள் கூறும் அப்பிரச்சினையை நான் தீர்த்து விட்டேன்.

ஊடகங்கள் – அண்மையில் பாரியளவான போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டன. இந்த போதைப்பொருள் கடத்தலைத் தடுப்பதற்கு முப்படையினரை ஈடுபடுத்துவீர்களா?

பிரதம அமைச்சர் – இப்போதும் அதனைச் செய்கிறோம். நாட்டினுள் போதைப்பொருள் கொண்டு வரப்படுவதைத் தடுக்க கடற்படையினரும் பொலிசாரும் முயற்சிக்கின்றனர். பல மாதங்களாக கடலில் அவதானத்துடன் இருந்து தான் கடற்படையினர அந்த போதைப்பொருட்களைக் கைப்பற்றினர். சிறையினுள் இருக்கும் மூவரே இவற்றை வழிநடாத்துகின்றனர்.

ஊடகங்கள் – எமக்கு இன்னும் தேர்தல் முறைமையை மாற்ற முடியாமற் போயுள்ளது. அதேபோன்று பெண்களின் பிரதிநிதித்துவம் தொடர்பாகவும் பிரச்சினை உள்ளதல்லவா?

பிரதம அமைச்சர் – நாம் எல்லா மாவட்டங்களிலும் பெண்களுக்கு வேட்புமனுக்களை வழங்குவோம். மக்கள் தான் அவர்களைத் தெரிவுசெய்ய வேண்டும்.
பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் அவர்கள் – மேற்கொள்ளப்பட்டுள்ள ஆய்வுகளின்டி பெண்கள் பெண்களுக்கு வாக்களிப்பதில்லை என தெளிவாகியுள்ளது. கட்சி வேட்புமனு வழங்கினாலும் மக்களே தெரிவுசெய்ய வேண்டும்.

ஊடகங்கள் – வரிச் சுமை குறைந்த போதிலும் பொருட்களின் விலை குறைவடையவில்லை என்ற குற்றச்சாட்டு காணப்படுகிறது.

பிரதம அமைச்சர் – கடந்த தினமொன்றில் நான் மொத்த வியாபாரிகளையும் அரசாங்கத்தைச் சேர்ந்தவர்களையும் அழைத்து கலந்துரையாடினேன். சீனியைத் தவிர ஏனையவற்றுக்கு சிறியளவிலான வரியே அறவிடப்படுகிறது. சில அத்தியாவசிய உணவுப் பொருட்களுக்கு வரி அறவிடப்படுவதில்லை.

பந்துல குணவர்தன அவர்கள் – வெட் வரியே குறைக்கப்பட்டது. எந்தவொரு அத்தியாவசியப் பொருளுக்கும் வெட் கிடையாது. கிழங்கு, வெங்காயம், பயறு, கடலை போன்ற எந்தவொரு அத்தியாவசிய உணவுப் பொருளுக்கும் வெட் அறவிடப்படுவதில்லை. மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக் காலம் முடிவடையும்போது ஒரு டொலருக்கு 131 ரூபாய் தான் செலுத்தப்பட்டது. எமக்கு அரசாங்கத்தைக் கையளிக்கும்போது 183 ரூபாய் செலுத்தப்படுகிறது. ஒவ்வொரு டெலாருக்கும் 52 ரூபாய் மேலதிகமாகச் செலுத்த வேண்டியுள்ளது. அத்துடன் நாணயமாற்று விகிதத்தில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சி காரணமாக ரூபாயின் விலை அதிகரித்துள்ளது. கடந்த அரசாங்கத்தின் காலத்தில் பாரிய மீதியேற்பட்டு பால்மா மற்றும் பருப்பின் விலைகள் வீழ்ச்சியடைந்தன.
கொரோனா காரணமாக பொருள் வழங்கலில் பிரச்சினை ஏற்பட்டுள்ளது. மூலப்பொருட்கள் இல்லாமை காரணமாக தொழிற்சாலைகளை மூட வேண்டியேற்பட்டுள்ளது. அந்தளவு ரூபாய் வீழ்ச்சியடைந்த போதிலும் நாம் வழங்கும் விலையை அந்தக் காலத்துடன் ஒப்பிடுகையில் பெரிய மாற்றம் ஏதுமில்லை என பிரதம அமைச்சர் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற கூட்டத்தின்போது மொத்த வியாபாரிகள் சுட்டிக்காட்டினர். அரச நிறுவனங்களில், மக்கள் நடமாடும் இடங்களுக்கு வந்து பொருட்களை விற்பனை செய்யுமாறு பிரதம அமைச்சர் உத்தரவிட்டார்.

பிரதம அமைச்சர் – நாம் முன்னர் அவ்வாறு செய்தோம். அதன் பின்பு சந்தையில் விலைகள் குறைவடைந்தன.

ஊடகங்கள் – அர்ஜூன் மஹேந்திரனை விரைவாகக் கொண்டு வருவதாக நீங்கள் கூறியிருந்தீர்கள்.

பிரதம அமைச்சர் – சட்டரீதியாக அதற்குத் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. அவர்தான் பிரஜாவுரிமை இல்லாமையினால் சத்தியப் பிரமாணம் செய்யாது பண நோட்டில் கையெழுத்திட்டவர்.

ஊடகங்கள் – ஒரு பிள்ளையொன்றின் சம்பவம் தொடர்பாக சமூக ஊடகங்களில் பேசப்படுகிறது.

பிரதம அமைச்சர் – அந்த சம்பவம் தொடர்பாக தற்போது விசாரணை இடம்பெறுகிறது. உண்மையில் இவ்வாறான சம்பவங்கள் உறுதிப்படுத்தப்படின் கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும் என நான் நினைக்கிறேன்.

ஊடகங்கள் – கொரோன தொடர்பாக நமது நாடு எந்தளவு தயார் நிலையில் உள்ளது?

பிரதம அமைச்சர் – எமது நாட்டில் கண்டறியப்பட்டவர்களுக்கு கொரோன இல்லை என்றே இப்போது கூறுகின்றனர். வருகை தரும் அனைவரும் தொற்றுத்தடைக் காப்புக்கு உட்படுத்தப்படுகின்றனர். மூன்று வார காலம் விடுமறையில் வருவோர் 14 நாட்கள் தொற்றுத்தடைக் காப்புக்குச் செல்வது பலனற்றது. இது தொடர்பாக விழிப்புணர்வு பெற வேண்டும்.

ஊடகங்கள் – 2000 தொழு நோயாளர்கள் உள்ளதாக ஹெந்தல வைத்தியசாலையின் பணிப்பாளர் கூறியுள்ளார்.

பிரதம அமைச்சர் – ஹெந்தல வைத்தியசாலையில் இடவசதிகள் உள்ளன. நோயாளிகளை வேறுபடுத்துவதற்கான இடவசதிகள் உள்ளன. அருகிலுள்ள இடத்துக்கு அனுப்பியே தொற்றுத்தடைக் காப்புக்கு உட்படுத்த வேண்டுமல்லவா?

ஊடகங்கள் – சவேந்திர சில்வா மீது விதிக்கப்பட்ட தடையின் தற்போதைய நிலைமை யாது?

பிரதம அமைச்சர் – நாம் எதிர்ப்பினைத் தெரிவித்துள்ளோம்.

ஊடகங்கள் – நடிகர்கள், நடிகைகள், மதகுருமார் மற்றும் விளையாட்டு வீரர்களுக்கு வேட்புமனு வழங்கக் கூடாது என்ற கருத்து சமூகத்தில் காணப்படுகிறது.

பிரதம அமைச்சர் – ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு கருத்து உண்டு. இறுதியில் மக்கள் தான் வாக்களிக்கின்றனர். போட்டியிடுவதற்குப் பொருத்தமாயின் அவர் நடிகரா விளையாட்டு வீரரா என்பது முக்கியமில்லை. முரளியின் அண்ணன் நுவரெலியாவில் தாமரை மொட்டில் போட்டியிடுகிறார்.

ஊடகங்கள் – விகாரைகளில் அரசியல் செய்ய வேண்டாம் எனவும், விகாரைகளுக்குச் செல்ல வேண்டாம் எனவும் தேர்தல்கள் ஆணையாளர் கூறியுள்ளார் அல்லவா?

பிரதம அமைச்சர் – விகாரைகளுக்குச் செல்ல வேண்டாம் எனக் கூறவில்லை. விகாரைகளில் அரசியல் செய்ய வேண்டாம் என்றே கூறியுள்ளார். விகாரைகளுக்கு பள்ளிகளுக்குச் செல்ல வேண்டாம் என யாரும் கூற முடியாது.

ஊடகங்கள் – உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக நீதி நிலைநாட்டப்படுமா என அனைவரும் அவதானத்துடன் உள்ளனர்.

பிரதம அமைச்சர் – இந்நாட்களில் ஆணைக்குழு அது தொடர்பாக விசாரணை செய்கிறது. ஆணைக்குழுவில் நியமிக்கப்பட்டோர் தொடர்பாக பிரச்சினை இல்லை. காடினல் அவர்கள் உட்பட பாதிக்கப்பட்டவர்கள் ஆணைக்குழு தொடர்பாக திருப்தியடைகின்றனர். எமக்கு அந்த நீதிபதிகள் தொடர்பாக முழுமையான நம்பிக்கை உள்ளது.

ஊடகங்கள் – ஜெனீவா இணை அனுசரைணயிலிருந்து விலகியமை காரணமாக சர்வதேசரீதியாக ஒதுக்கப்படுவதாக எதிர்க்கட்சியினர் கூறுகின்றனர்.
பிரதம அமைச்சர்- அப்படியொன்று இல்லை. நாம் இது வரை எந்த அழுத்தத்தினையும் காணவில்லை.

ஜீ.எல். பீரிஸ் அவர்கள் – மனித உரிமைகள் பேரவைக்கு அவ்வாறான அதிகாரம் இல்லை. அவ்வாறு செய்யும் ஆற்றல் பாதுகாப்புச் சபைக்கே காணப்படுகிறது.

பிரதம அமைச்சர் – தினேஷ; குணவர்ன அவர்கள் ஆணையாளரை சந்தித்தபோது நல்ல பதில் கிடைத்துள்ளது. எமது நாட்டில் இது தொடர்பாக விசாரணைகள் இடம்பெறுகின்றன. எம்மிடம் இரண்டு அறிக்கைகள் உள்ளன. அந்த அறிக்கைகளுக்கு ஏற்ப மேலதிக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

ஜீ.எல். பீரிஸ் அவர்கள் – அரசியலமைப்பின்படி எமது நாட்டுப் பிரஜைகள் தொடர்பாக விசாரணை மேற்கொள்ள வெளிநாட்டு நீதிபதிகளை நியமிக்க முடியாது.

ஊடகங்கள் – அரசாங்கத்திற்குப் பணம் இல்லை எனக் கூறுகின்றனர். இப்போது 50,000 பட்டதாரிகளுக்குத் தொழில்களும் வழங்கப்பட்டுள்ளன.

பந்துல குணவர்தன அவர்கள் – அரசாங்கத்திற்குப் பணம் இல்லை என நாம் கூறவில்லை. முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீர ஏப்ரல் 31 வரை குறைநிரப்பு மதிப்பீடொன்றை சமர்ப்பித்துள்ளார். எமது பணிகளை மேற்கொண்டு செல்வதில் எந்தப் பிரச்சினையுமில்லை. பாராளுமன்றம் கலைக்கப்பட்ட பின்பு அரசியலமைப்பின்படி மொத்த வரவுசெலவில் 10மூ க்கு குறைவாக எந்தளவு பணத்தையும் அங்கீகரித்து செலவு செய்யும் சந்தர்ப்பம் ஜனாதிபதிக்கு காணப்படுகிறது. கடன் தவணைகளைச் செலுத்துதல், சமூர்த்திக் கொடுப்பனவுகள் தொடர்பாக பிரச்சினையில்லை. கடந்த அரசாங்கம் செலுத்த வேண்டிய விலைப்பட்டியல்களைத் தீர்ப்பதற்கு மேலதிக மதிப்பீடொன்று இல்லை. கடன் எடுப்பதன் காரணமாக அனுமதி வழங்கவில்லை என எதிர்க்கட்சித் தலைவர் கூறினாலும் அரசுக்கு நிதிப் பிரச்சினையொன்று இல்லை.

ஊடகங்கள் – எம்.சீ.சீ. ஒப்பந்தத்தில் கைச்சாத்திடுவதால் நாட்டிற்குப் பாதிப்புக்கள் ஏற்படுமா?

பிரதம அமைச்சர் – தற்போதைக்கு கைச்சாத்திட வேண்டாம் என ஆணைக்குழு தெரிவித்துள்ளது. சில விடயங்களைத் திருத்தினால் பிரச்சினை இல்லை எனவும் சொல்லப்படுகிறது.

ஊடகங்கள் – மாகாண சபைத் தேர்தலும் பொதுத் தேர்தலைப் போன்று தாமதமாகியுள்ளது.

பிரதம அமைச்சர் – நாம் தேர்தல்களைப் பிற்போடுவதில்லை. பாராளுமன்றத் தேர்தல் முடிவடைந்தவுடன் முடிந்தளவு விரைவாக தேர்தலுக்குச் செல்ல வேண்டும் என்பதே எமது நம்பிக்கை.

ஊடகங்கள் – நாட்டிற்குப் பாதிப்பை ஏற்படுத்துகின்ற சட்டங்கள் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டன. அவற்றை மாற்றியமைக்க மூன்றில் இரண்டு அதிகாரத்தைக் கோருகிறீர்கள். உங்களிடம் எவ்வாறான திட்டம் காணப்படுகிறது?

பிரதம அமைச்சர்- நாம் புதிய யாப்பொன்றை உருவாக்குவோம். அடிப்படையில் 19 ஆந் திருத்தம் அகற்றப்பட வேண்டும். 19 ஆந் திருத்தம் காரணமாகவே ஐக்கிய தேசியக் கட்சியில் பிரச்சினை ஏற்பட்டுள்ளது. அனைத்துப் பிரச்சினைகளுக்கும் காரணம் 19 ஆந் திருத்தம் ஆகும்.

பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் அவர்கள் – சட்டத்தினையும் ஒழுங்கையும் பாதுகாப்பது அரசாங்கத்தின் கடமையாக இருப்பினும், அதற்கு பொலிஸ்மா அதிபரை நீக்க முடியாது. பொலிஸ்மா அதிபர் விலங்கிடப்பட்டு நீதிமன்றத்திற்கு கொண்டு வரப்படுகிறார். நீதிபதி அவரை சிறையிலடைக்கிறார். எனினும் பொலிஸ்மா அதிபரை நீக்குதவற்கான ஒரு முறைமை இல்லை. பதவி விலகுமாறு அரசாங்கம் கூறுகிறது. நான் பதவி விலக மாட்டேன் என பொலிஸ்மா அதிபர் கூறுகிறார். 19 ஆந் திருத்தம் காரணமாகவே இந்த நிலைமை ஏற்பட்டது.

ஊடகங்கள் – மக்களின் இறையாண்மை அரசாங்கத்திற்கே உள்ளது. ஆணைக்குழுக்களுக்கு அந்தளவு அதிகாரம் இல்லை, மக்களுக்கு நேரடியாக பொறுப்புக் கூறாத அவர்கள் நாட்டில் ஒழுங்கீனத்தை ஏற்படுத்த ஏன் இடமளிக்கிறீர்கள்?

பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் அவர்கள் – அரசியலமைப்புப் பேரவையே ஆணைக்குழுக்களை நியமிக்கிறது. அரசியலைப்புச் சபையில் 7 பேருக்கான நியமனத்தை பிரதம அமைச்சரும் எதிர்க்கட்சித் தலைவரும் இணைந்து மேற்கொள்கின்றனர். இந்த இருவரும் இணைந்து ஒன்பது பேரில் ஏழு பேரை நியமிக்கின்றனர். அந்த ஏழு பேரும் தான் இந்த அனைத்து ஆணைக்குழுக்களையும் நியமிக்கின்றனர்.

ஊடகங்கள் – புதிய உற்பத்திகள் மூலமே ஆசிய நாடுகள் முன்னேற்றமடைந்தன. பல்கலைகழக அமைப்பில் புதிய படைப்புக்கள் உருவாகின்றன. எனினும் புதிய தயாரிப்புகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.

பந்துல குணவர்தன அவர்கள் – மஹிந்த சிந்தனை எதிர்கால நோக்கு வேலைத்திட்டத்தின் கீழ் நாம் தொழிநுட்பம்; மற்றும் புத்தாக்கம் தொடர்பான பாடத்தினை அறிமுகப்படுத்தினோம். அதற்கேற்ப பாடசாலைகளில் புதிய விடயங்கள் மேற்கொள்ளப்படுகின்றன. தற்போது பாடசாலையில் அதிகளவான வேலைகளைப் பிள்ளைகளே செய்கின்றனர். அவ்வாறான 300 பாடசாலைகள், 15 பல்கலைக்கழகங்கள், ஏனைய உயர் கல்வி மற்றும் புத்தாக்க நிறுவனங்களும், ஹோமாகமை மஹிந்த ராஜபக்ஷ வித்தியாலயம் மற்றும் அருகிலுள்ள தொழிநுட்பக் கல்லூரிகளும் ஒன்றிணைந்து 11, 12, 13 ஆந் திகதிகளில் கண்காட்சியொன்றை நடாத்துகின்றன. ஹோமாகமையில் அதிகளவான தொழிநுட்பக் கல்லூரிகள் உள்ளன. எந்தளவு புத்தாக்கங்கள் இடம்பெற்றுள்ளன என்பதை அறிந்துகொள்ள முடியும். வர்த்தகர்களுக்கு, புத்தாக்கங்களை செய்வோருக்கு உதவுவதற்கும் சந்தர்ப்பம் அளிக்கப்படும்.

ஊடகங்கள் – உங்களது ஆட்சிக் காலத்தில் போரினை முடிவுக்கு கொண்டு வந்தீர்கள். அபிவிருத்திகள் மேற்கொள்ளப்பட்டன. எனினும் மக்களின் உள்ளங்களை வெல்ல முடியாமல் போனதல்லவா?

பிரதம அமைச்சர் – அதற்கு காரணம் வெறுப்பு ஏற்படுத்தப்பட்டமையாகும். லெம்போகினி கதை மூலம் இளம் பிள்ளைகள் மத்தியில் பொறாமை ஏற்படுத்தப்பட்டது. எனினும் தேர்தலின் பின்பு நான் வீடு சென்ற பின்னர் தான் மாற்றம் ஏற்பட்டது. இரண்டு கிலோமீட்டர் தூரம் வரிசையில் இருந்து என்னைப் பார்க்க கால்டன் வீடு தேடி வந்தனர். வரிசையாக வந்து வணக்கம் கூறி விட்டுச் சென்றனர். அவ்வாறானதொரு சமூகம் உருவானது. யுத்தம் காரணமாக பொன்சேக்காவுக்கு வாக்களிக்கின்றனர்.

ஊடகங்கள் – சாய்ந்தமருது நகர சபை தொடர்பில் என்ன நடந்தது?

பிரதம அமைச்சர் – அதற்கு ஆணைக்குழுவொன்றை நியமிக்க வேண்டும் என்பதால், அது வரை தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டது.

0 விளக்கவுரை அளி
0

related posts

Leave a Comment