இயக்குனர் ஜி மோகன் இயக்கிய ‘திரெளபதி’ திரைப்படம் கடந்த மாதம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. ஒரு பிரிவினர் இந்த படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தபோதிலும் பல அரசியல்வாதிகள் இந்த படத்தை ஆதரித்தும் எதிர்த்தும் இலவசமாக புரமோஷன் செய்தால் வசூல் அளவில் இந்த படம் மிகப்பெரிய வெற்றி அடைந்தது
இந்த நிலையில் இயக்குனர் ஜி மோகன் தனது அடுத்த படம் குறித்த தகவலை தனது சமூக வலைத்தள பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது:
திரெளபதின்னு கடவுள் பெயர் வைத்ததால் தான் இவ்வளவு வன்மம் என்று தெளிவா புரியுது.. அடுத்த பட பெயரும் கடவுள் பெயர் தான்.. விரைவில் அறிவிப்பு வரும்.. காத்திருங்கள்.. என்று கூறியுள்ளார்.
இதில் இருந்து இயக்குனர் ஜி மோகன் தனது அடுத்த படத்தில் ஒரு சர்ச்சைக்குரிய விஷயத்தை டைட்டிலிலேயே வைக்கப் போகிறார் என்று தெரிவதால் ஆதரவாளர்களும் எதிர்ப்பாளர்களும் இப்போதே தயாராக உள்ளனர்.